பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

பாப்பா முதல் பாட்டி வரை

கண்ணாடி ஊசியின் மூலம், வீரியம் இல்லாத உயிர் அணுவை எடுத்து, பெண் முட்டையினுள் செலுத்தி, செயற்கை முறையில் கருத்தரிப்புச் செய்யப்படுகிறது. இது மலட்டுத் தன்மை உள்ள ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாத மாகும்.

5. எந்தவித ஆண் மலட்டுத் தன்மையையும் போக்கிட முடியுமா?

பிறந்த உடனேயே ஆண் குழந்தைக்கு விரைக் கொட்டை கீழே இறங்காமல் இருந்தால், இரண்டு ஆண்டுகளுக்குள் அறுவை சிகிச்சை செய்து அதைச் சரியான நிலையில் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால், நிரந்தர மசுபடுத்தன்மைக்குப் பிறப்பே வழி வகுத்து விடும். எந்த சிகிச்சை முறையிலும் வழி இல்லை. இதே போன்று, விந்து உற்பத்தி ஆகாவிட்டாலும், எந்த மருத்துவ முறையும் பலன் அளிக்காது.

6. சோதனைக் குழாய் மூலம் கருமுட்டை உருவாக்க இந்தியாவில் ஆகும் செலவு எவ்வளவு?

சோதனைக் குழாய் மூலம் கரு முட்டையை உருவாக்க மட்டும், ரூ.45 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை செலவாகும். குழந்தைப் பேறு இல்லாத பெண்ணுக்கு, சோதனைக் குழாய் முறையில், முதலில் கரு முட்டைகளைப் பெருமளவில் உருவாக்க, ஹார்மோன் ஊசிகள் போடப்படும். ஒரு ஹார்மோன் ஊசி மருந்தின் விலை ரூ.6000. நாள் ஒன்றுக்கு நான்கு ஊசிகள் வீதம் குறைந்தபட்சம், 8 தினங்களுக்கு இந்த ஹார்மோன் ஊசிகள் போடப்படும். ஆக இதற்கே ரூ.20 ஆயிரம் செலவாகும். கரு முட்டையை உருவாக்கி, பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்த பிறகு, கரு பதியும் நிலையில் பிரசவச் செலவுகள் தனி.