பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

149

கர்ப்பப் பையில் கரு பதியாத நிலையில், ரூ.55 ஆயிரம் வீண் தான். இதற்காகத்தான் முதலில், கணவன், மனைவியை அழைத்து, நேரடியாகப் பேசி, சோதனைக் குழாய் முறையை விளக்குகிறோம். செலவு செய்ய நிதி ஆதாரம் என்ன, செலவு செய்து ஒரு வேளை கரு பதியாவிட்டால், தொடர்ந்து வாழ்க்கையை நடத்தக் கையில் பணம் உள்ளதா? குழந்தையை வளர்க்க என்ன செய்வீர்கள் என்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். பின்னர் தான் செயற்கைக் கருத்தரிப்பு முறைக்குத் தம்பதியினரை உட்படுத்துகிறோம்.

சோதனைக் குழாய் முறையில் கர்ப்பப் பையில் கரு பதியாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கரு முட்டையை வெளியே எடுக்க, முதலில் போடப்படும் ஹார்மோன் ஊசிகள் உள்பட, பல்வேறு காரணங்களால் கரு பதியாத நிலை ஏற்படுகிறது.

7. குழந்தை இல்லாத நடுத்தர மக்களும், சோதனைக் குழாய் முறையில் அதிக செலவின்றிக் குழந்தை பெற்றுக்கொள்ள, ஏதாவது வழி உள்ளதா? அரசு என்ன செய்யலாம்?

சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பேற்றை உருவாக்க, ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி மதிப்புள்ள சோதனைக் கருவிகள் தேவை. மேலும் மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்பட 15 பேர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசைப் பொறுத்தவரை, இந்த விஷயங்கள் எல்லாம் மிகவும் கஷ்டம். இதை அரசு செய்ய முடியாது.

8. அண்மையில் இக்சி முறையில் இரண்டாவது மனைவியின் முட்டையை எடுத்து, முதல் மனைவி கர்ப்பப்பையில் செலுத்த, குழந்தை பிறந்து. இதேபோன்று குழந்தை இல்லாத பெண்ணின் திருமணமாகாத சகோதரி, சம்மதிக்கும் நிலையில், அவரது முட்டையைப் பயன்படுத்தி, குழந்தைப் பேற்றைக் கொடுக்கும்