பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

159

கொண்டே இருப்பதால், தோலில் அழற்சி ஏற்படுகிறது. மேலும், பிறந்தது முதல் தோலில் ஏற்படும் சிறு கீறல்கள் வடுக்களாகி, சிறுநீர்த் துவாரத்தை மேலும் சிறிதாக்கி விடுகின்றன. இதனால் தோல் விரிவடையாத நிலை ஏற்படுகிறது.

இப் பிரச்சினை ஏற்படும் குழந்தைகள், சிறுநீர் கழிக்க முடியாமல் துடிக்கும். அழுதுகொண்டே சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் கழிக்கும். மூத்திரத் தண்டின் முனை வீங்கும்.

மருத்துமனைக்குக் குழந்தையை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, சிறுநீர் வெளியேறும் இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றினால், நிவாரணம் கிடைக்கும். பாரசிட்டமால் மருந்துகளைக் கொடுத்து குழந்தையைத் துங்க வைக்கலாம்.

வலி அதிகமாக இருக்கும் நிலையில் , அறுவை சிகிச்சை செய்து, தோலை நீக்கி விட்டால், சரியாகி விடும். இந்த அறுவைசிகிச்சைக்கு ‘சர்கம்சிஷன்’ (Circumcision) என்று பெயர். 500 குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு இப் பிரச்சினை ஏற்படுகிறது. சிறுநீர்ப் பாதையில் கற்கள் இருந்தாலும், இதேபோன்று பிரச்சினை ஏற்படும் என்பதால் முதலில் அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் குறித்து உறுதி செய்துகொண்டு சர்கம்சிஷன் அறுவை சிகிச்சை செய்வது நல்லது. ஏனெனில், சர்கம்சிஷன் செய்து தீர்வு கிடைக்காவிட்டால், கற்களை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும்.

சிறுநீரகப் பாதையில் கற்கள் : சில குழந்தைகளுக்குச் சிறுநீரகப் பாதையில் கற்கள் இருந்தால், சிறு நீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படும். கற்கள் சிறு நீரகத்தில் இருக்கலாம். சிறு நீரகத்திலிருந்து மூத்திரப்