பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

பாப்பா முதல் பாட்டி வரை

நுரையிரல் சுத்தம் செய்து அனுப்பும் ரத்தத்தை உடல் முழுவதற்கும், அயோட்டா ரத்தக் குழாய் மூலம் இதயம் பம்ப் செய்கிறது.

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் வேளையில், நுரையீரல் மிகச்சிறிய அளவில் இருக்கும். அப்போது அதற்குப் பணி கிடையாது. குழந்தை பிறந்து, முதல் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது தான் துரையீரல் அதன் பணியைத் தொடங்குகிறது. அதுவரை சிரைக்கும் மகாதமனிக்கும் இடையில் உள்ள இணைப்புக் குழாய் மூலம் தான் ரத்த ஒட்டம் நடைபெறும். குழந்தை பிறந்து துரையீரல் தனது பணியைத் தொடங்கிய அந்த நேரத்திலேயே இந்த இணைப்புக் குழாய், தானாகவே மூடிவிடும் அதிசயம் நடைபெறுகிறது. சில குழந்தைகளுக்கு இந்த இணைப்புக்குழாய், இதுபோன்று மூடாது. இதனால், சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் கலக்கிறது. இதற்கு ‘பேடண்ட்டக்டஸ் ஆா்ட்டிாியோசஸ்’ (Patene Ductus Arteriosus) என்ற பெயா்.

சில குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் இந்த இணைப்புக் குழாய் மூடிவிடும். ஒரு வாரம் கழித்தும் மூடாவிட்டால், பிரச்சினைதான். இக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு மூச்சுமுட்டும். இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்தால் இயந்திரம் இயங்குவதுபோல் ஓசை கேட்கும். இந்த ஒசைக்கு ‘மெஷினாி மா்மா்’ (Machinery Murmur) என்று பெயா்.

இக் கோளாறு காரணமாக, அசுத்த ரத்தம் அதிகமாகப் போவதால், நுரையீரலின் பணிச்சுமை அதிகமாகிறது. அது இதயத்துக்கு இயல்பான அளவை விட, அதிக ரத்தத்தை அனுப்புகிறது. இதனால் இதயத்துக்கும் வேலை அதிகரிக்கிறது. சிறுநீர் சரியாகப் போகாத நிலை, அடிக்கடி சளி பிடித்தலும் ஏற்படும். குழந்தை சோர்வாகவே இருக்கும்.

எக்ஸ்ரே, ஈசிஜி (இதயச் செயல்பாட்டை மதிப்பிடும் கருவி) கம்ப்யூட்டர் திரைகள் கொண்ட கலர் டாப்ளர்