பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பாப்பா முதல் பாட்டி வரை

நல்ல உணவுகளை உட்கொண்டால், குழந்தைகளை இந் நோய்கள் பாதிக்காது காப்பாற்ற முடியும்.

பிரசவிக்கும் பொழுது, சில நோய்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன. தாயின் பிரசவ உறுப்பு, வெட்டை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், பிறக்கும் குழந்தையின் கண்களை வெட்டைநோய்க் கிருமிகள் தாக்கி, ஒருவகை நோயை உண்டு பண்ணுகின்றன. சில சமயம் பிரசவம் மிகத் துன்பமாகி விடுகிறது. பிரசவ சமயத்தில் ஆயுதங்களைக் கையாண்டதினாலும், நீண்ட நேரம் தாயின் கருப்பையில் தங்க நேர்வதினாலும், மூச்சு முட்டல், தலையில் காயம், மூளையில் இரத்தப் பெருக்கு போன்ற சில அபாயங்கள், குழந்தைக்கு ஏற்படுகின்றன. இவைகளைத் தடுப்பதும் எளிது. பிரசவ சமயத்தில் தகுந்தபடி கவனித்தால், குழந்தைக்கு இந்த அபாயங்கள் நேராது தடுக்க முடியும்.

குழந்தை பிறந்தவுடன், முதல் நான்கு வாரங்கள் சில நோய்கள் ஏற்படக்கூடும். கருப்பையினின்று வெளியே வந்ததினால் ஏற்படும் ஒரு புதிய சூழ்நிலையைச் சமாளித்துக் கொண்டு, அதற்குத் தக்கவண்ணம், தங்களைச் சரிப்படுத்திக் கொள்ளக் குழந்தையின் உடல் உறுப்புக்கள் முயற்சி செய்கையில, இம் முயற்சியில் சிறிது குறைபாடு ஏற்படுமாகில், குழந்தை சட்டென நோய்களுக்கு இலக்காகி விடுகின்றது. முழு வளர்ச்சியடையாது, குறை மாதத்திலே பிறக்கும் குழந்தைகளை நோய்கள் எளிதாகப் பீடித்துக் கொள்ளுகின்றன. மற்றும், பிறந்த, முதல் மாதத்தில் நோயினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதி, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் தாம் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

முதல் இரண்டாண்டுகளில் குழந்தையின் உடல் விரைவாக வளர்ச்சியடையும். உடல் நலிவினாலும்,