பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

171

அந்தக் குழந்தை பேசும் சக்தியையும், முற்றிலும் இழந்துவிடும். காரணம், பிறந்த ஐந்து ஆண்டுக்குள், காதின் மூலம் கேட்கும் மொழி, சத்தங்களை வைத்துப் பேச்சுத் திறனை மூளை பெறுகிறது. ஐந்து வயதுக்கு மேல் காது கேட்பதற்கான சிகிச்சைகள் செய்தாலும், பேசும் திறனைப் பெறும் வாய்ப்பை மூளை இழந்துவிடுகிறது.

தற்போது குழந்தைகளை 3-4 வயதிலிலேயே பள்ளியில் சேர்க்கின்றனர். தனியாகப் பெற்றோருடன் இருந்த குழந்தை, பள்ளியில் பல குழந்தைகளுடன் சேரும்போது, அக் குழந்தைக்கு அதிக சளி, தொண்டை வலி, சாய்ச்சல் ஆகியமூச்சு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.

இதற்குக் காரணம் இதுபோன்ற வியாதிகளை ஏற்படுத்தும் கிருமிகள், பலவித ரூபங்களில் நம்மிடையே உலவுகின்றன. குறிப்பிட்ட ஒரு கிருமி, குழந்தைக்கு நோயை ஏற்படுத்தும் போது, அக் குழந்தைக்கு அதை எதிர்க்கும் Antibodies எதிர்ப்புசக்தி ரத்தத்தில் உண்டாகிறது. பல குழந்தைகள், ஒரே அறையில் இருக்கும் போது ஒரு குழந்தையிடமிருந்து இன்னொரு குழந்தைக்கு வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.

எனவே, வீட்டில் தனியாக இருந்தபோது, பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் மட்டும் இருந்த கிருமிகளால் பாதிக்கப்பட்டு, எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தை, பள்ளியில் பல்வேறு கிருமிகளையும் எதிர்கொண்டு பாதிக்கப்பட்டு, அதனால் தேவையான எதிர்ப்புச் சக்தியையும் அடைகிறது.

குழந்தைகளுக்கு இதுபோன்ற அதிகமான இடையூறுகள், பள்ளியில் சேர்த்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். இந்தக் காலகட்டம் முடியும்போது, பரவலாக, வெளியே உள்ள கிருமிகளுக்குக் குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் டானிக்குகளைத் தினமும் கொடுப்பதால், நோயின் பாதிப்புக் குறைய உதவும். அதே நேரத்தில் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.