பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

பாப்பா முதல் பாட்டி வரை

சிறுமூக்கு உடைதல் : ஐந்து வயதுக்கு மேல், மூக்கில் சிறுமூக்கு உடைந்து ரத்தம் வருவது, 20-40 சதவீதம் குழந்கைளுக்கு ஏதோ ஒரு காலகட்டத்தில் உண்டாகிறது. மூக்கில் ரத்தம் வரும்போது, படுக்க வைத்து, மூக்கின் மேல் ஐஸ் கட்டி போன்றவற்றை வைப்பது தவறு.

சிறுமூக்கு உடைந்து ரத்தம் வரும்போது, உட்கார வைத்து, இரண்டு விரல்களால் மூக்கை அழுத்தி, வாயால் மூச்சுவிடச் செய்து, இரண்டு நிமிடம் பொறுத்திருக்க வேண்டும். அதே நேரம், குனியச் செய்ய வேண்டாம். இவ்வாறு செய்யும்போது, அடிக்கொரு முறை மூக்கை அழுத்திப் பிடித்துள்ள பிடியை விட்டு ரத்தம் நின்று விட்டதா என்று பார்க்கக் கூடாது. ஐஸ் இருந்தால் மூக்கின் பக்கவாட்டில், ஒரு துணியில் ஐஸ்துண்டை உடைத்து வைக்க வேண்டும்.

கன்னத்தில் அடித்தால் காது ஜவ்வு கிழியும் : குழந்தைகளின் கன்னம், காதுப் பாகங்களில் அறைவது (pal.slap) மிகவும் ஆபத்தானது. இது தவிர, தவறுதலாக விளையாட்டின்போதும், காதுகளின் மீது இது போன்று அடிபடலாம். இதன் காரணமாக, காதின் ஜவ்வு கிழிய வாய்ப்பு உள்ளது. அடி பலமாக இருந்தால், காது நரம்பு முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது போன்ற சம்பவம் நடந்தால், காதில் எந்த வகையான மருந்தையும் (Ear drops) போடக்கூடாது. கட்டாயமாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

அதனால், அடிபட்ட நரம்பு, பாதிக்கப்பட்ட நிலையில், பொதுவாக, ஒரு காது மட்டும் பாதிக்கப்படுவதால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதில், எந்தப் பாதிப்பும் இல்லாதது போலத் தோன்றும். சில நாள்களுக்குப் பிறகே, ஒரு காது சரியாகக் கேட்பதில்லை என்பது தெரியவரும். எனவே சிகிச்சை அவசியம்.