பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

பாப்பா முதல் பாட்டி வரை

இந்தக் குறைபாடுகளைக் கண்டறிய, மற்றும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற, என்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி எனும் நவீன சிகிச்சை முறை உள்ளது. இதன் மூலம் 95 சதத்துக்கு மேல், மீண்டும் சைனஸ் வராமல் தடுக்கும் அளவுக்குச் சிகிச்சை செய்ய வசதி உள்ளது.

ஒவ்வாமை ஒரு தனி நோய் - சைனஸ் அல்ல : மேற்கூறிய வியாதிகள், ஒருவருடைய மூக்குப் பகுதியின் உடல் அமைப்பில் உள்ள சிறிய குறைபாடுகளைச் சரி செய்வதன் மூலம் குணப்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு, இந்தச் சிகிச்சை முறைகள் உபயோகிக்கப்பட்டாலும், ஒவ்வாமைக்குக் கொடுக்கும் மருந்துகள், தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். பார்த்தீனியம், நூல் பஞ்சு, தூசு போன்ற பொருள்களால், கடுமையான அளவு ஒவ்வாமை உள்ளவர்கள், மூக்கு வியாதிகள் தவிர, ஆஸ்துமா எனப்படும் நுரையீரல் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர்.

இதுபோன்றவர்களுக்கு, அவர்களைப் பாதிக்கும் பொருள் என்ன எனக் கண்டறிந்து அதிலிருந்து விலகியிருப்பதே சிறந்தது. இதுபோல, பாதிக்கும் பொருள்களைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை அலர்ஜி டெஸ்ட் Allergy test என அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள், ஒவ்வாமை வியாதியையே, ‘சைனஸைட்டில்’ எனக் கருதுகின்றனர். சிகிச்சை பெறாமல், நெடுங்காலம் ஒவ்வாமையால் அவதிப்பட்ட ஒருவருக்கு, சைனைஸ்டின் வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஒவ்வாமை உள்ள எல்லோருக்கும் சைனஸைட்டிஸ் இருப்பதில்லை.

தொண்டை : பொதுவாக, புகை பிடித்தல், குரலை உயர்த்தி அதிக நேரம் பேசுதல், வயிற்றில் அமிலத் தன்மை,