பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

177

நோயாளியின் கழுத்துப் பாகத்தில் மரத்துப் போகச் செய்யும் (Local anaesthesia) மருந்துகள் செலுத்தப்பட்டு, கழுத்தின் வழியாகக் குரல் நாண்களை இறுக்கவோ, தளர்த்தவோ, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சை நடக்கும் போதே, நோயாளி குரலை உண்டாக்கச் செய்து தகுந்த குரலமைப்பு வர (Turning) செய்யப்படுகிறது. இதுவே, நவீன சிகிச்சை முறை. தற்போதுள்ள காது சிகிச்சை முறைகளால் நோயாளிகளுக்குச் காதில் சீழ் நிற்பது, காதின் கேட்கும் தன்மை அதிகப்படுத்தப்படுவது, காது வியாதி, மூளைப் பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுப்பது எனப்படும் மூன்று முக்கிய காரியங்களையும், ஒரே அறுவை சிகிச்சை (Micro surgery) மூலம் செய்ய இயலுகிறது.

காதுச் சீழுக்கு உடனடி சிகிச்சையே நல்லது : நீண்ட நாள்கள் இதுபோன்ற வியாதிகளுக்குச் சிகிச்சையளிக்காமல் இருக்கும்போது, காதுச் சீழில் உண்டாகும் நச்சுப் பொருள்களால், காது நரம்புகள் பாதிக்கப்பட்டு, நரம்புத் தளர்ச்சி உண்டாகிறது. இதுபோல நரம்புத் தளர்ச்சி உண்டான நபர்களுக்கு, அறுவை சிகிச்சை மூலம் காதுகளில் சீழ் வராமல் இருக்கத்தான் செய்ய முடியும். மீண்டும் காது கேட்க வைக்க முடியாது.

காதில் இதுபோன்ற வியாதிகளில்,காதின் ஜவ்வு (செவிப்பறை), அதன் பிறகு உள்ள மூன்று சிறிய காது எலும்புகள், பாதிக்கப்பட்டு உருக்குலைந்து போக வாய்ப்புள்ளது. இவற்றை ஈடு செய்ய, அதே நோயாளியின் காதில், மேல்புறம் உள்ள சதை, காது மடலில் உள்ள நொறுக்கெலும்பு (Carblage) பயன்படுத்தப்படுகிறது. வேறு சிலருக்கு, மற்ற நோயாளிகளின் காதிலிருந்து எடுக்கப்-