பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

பாப்பா முதல் பாட்டி வரை

பட்ட மூக்குத் தண்டின் எலும்புகள், மைக்ரோஸ்கோப் கருவி மூலம் உருமாற்றி, பொருத்தப்பட்டு, மீண்டும் காதுகள் கேட்க வகை செய்யப்படுகிறது.

தொழில் காரணமாகத் காது பாதிப்பு: அதிகமான சத்தத்தில், அதாவது ஜெனரேட்டர், துளையிடும் இயந்திரம் போன்ற தொழில்களில் உள்ளவர்களுக்குக் காது நரம்புகள் ஒரு குறிப்பிட்ட வகையில் பாதிக்கப்படுகின்றன. காதுகள் கேட்டாலும், மற்றவர் பேசுவது என்ன எனத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது; இந்த ஆரம்ப அறிகுறி வரும் முன்பு, காதுகளில் அதிக சத்தம் பாதிக்காமல் இருக்கத் தேவையான தடுப்பு (Earut) உபயோகித்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.