பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

17

ஊட்டக் குறைவினாலும், இருமல், சளி போன்ற நோய்கள், இந்த வயதில் எளிதில் ஏற்படுகின்றன. பொதுவாகத் தொற்று நோய்கள் இந்தப் பருவத்தில் குழந்தைகளை எளிதில் பீடிக்கின்றன. ஆனால் சில குறிப்பிட்ட நோய்களைத் தடுக்கும் சக்திப் பொருள்கள் முதல் நான்கு அல்லது ஆறு மாதங்கள் குழந்தையின் இரத்தத்தில் அதிக அளவில் இருக்கின்றன. அதன் காரணமாகத் தட்டம்மை (Meales), இளம்பிள்ளை (Diphtherial), வாதம் போன்ற குறிப்பிட்ட நோய்கள், முதல் வயதில் அதிகம் வருவதில்லை. ஆனால், பொதுவாக, அம்மை, நிமோனியா, இன்புளுயன்சா போன்ற தொற்று நோய்கள் இப்பருவத்தில் விரைவில் தாக்குகின்றன. இரண்டாம் மாதத்திலிருந்து முதல் வயது வரை குழந்தைகள் நோயினால் இறக்கும் எண்ணிக்கை, முதல் மாதத்தில் நோயினால் மரணமடையும் எண்ணிக்கையைவிடக் குறைவு. நோயினால் இறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகள் தான் அதிகம். குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளிலும், மரண எண்ணிக்கை அதிகம். நோய்களுக்கும், அவற்றால் ஏற்படும் மரணத்திற்கும் வறுமை ஓரளவு காரணமாகிறது.

பள்ளிப் பருவத்திற்கு முந்தி, அதாவது இரண்டு வயதிலிருந்து ஐந்து வரை, உள்ள குழந்தைகளுக்கு வரும் நோய்கள், முதல் வயதைக் காட்டிலும் மிகவும் குறைவு. இப் பருவத்தில் நோய்களைத் தடுக்கும் சக்திப் பொருள்கள் உடலில் உண்டாகி, இரத்தத்தில் கலந்து, எதிர்க்கத் துவங்கிவிடுவதினால் பல நோய்கள் குழந்தைகளை அண்டுவதில்லை. மற்றைப் பருவத்தில் போல் இந்த வயதில், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளைப் பாதிக்கலாம். க்ஷயம், குடல்வாலழற்சி போன்ற நோய்கள் தாம் இப்பருவத்துக் குழந்தைகளின் மரணத்திற்கும், பெரு வாரியான காரணமாக அமைகின்றன. இப் பருவத்துக்