பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பழுதற்ற பல்லே பயனுள்ள செல்வம்

பல் ஒரு சிறிய உறுப்பு. பற்கள் ஒன்றாகச் சேர்ந்து வாயில் இருக்கும்போது, முகத்துக்குப் பொலிவு கொடுக்கின்றன. சொல்லுக்குச் சுவை ஊட்டுகின்றன. உணவுப் பொருள்கள் எளிதாக ஜீரணம் அடைவதற்குப் பற்களே உதவுகின்றன.

பல் உருவானது எப்போது? : தாயின் கருவறையில் உள்ள குழந்தைக்கு, 6-வது வாரத்தில் தாடை எலும்பில் பால் பற்கள் மொட்டாக வளரத் தொடங்குகின்றன. ஆக பல் பாதுகாப்பு கருவறையில் தொடங்குகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் கால்ஷியம் சத்து நிறைந்த உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தையின் பற்கள் நன்றாக வளரும். பால், பழங்கள், மீன், இறைச்சி ஆகியவற்றைக் கருவுற்றிருக்கும்போது அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

டெட்ரா சைக்ளின் வேண்டாம் : கர்ப்பத்தின்போது, தாய் நோய்வாய்ப்பட்டால், நோய்க் கிருமிகள் கருவில் உள்ள