பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தையின் பல் மொட்டுக்களைத் தாக்கும். எனவே கர்ப்பத்தின் போது நோய் வந்தால், ‘டெட்ராசைக்ளின்’ மாத்திரைகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில், இம் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டால் குழந்தை பிறந்து வளரும்போது, பற்கள் மஞ்சளாக முளைக்கும்.

தாய்ப் பாலே சிறந்தது : குழந்தையின் பல் வளர்ச்சிக்குத் தாய்ப் பாலே சிறந்தது. புட்டிப் பால் குடிக்கும் குழந்தைக்குத் தாடை வளர்ச்சியில் மாறுபாடு ஏற்படவும், விரல் சூப்பும் பழக்கம் வரவும் வாய்ப்புகள் உண்டு.

பயம் - வேண்டாம் : குழந்தை பிறந்தவுடன் 6-வது மாதத்தில், முதல் பால் பல் முளைக்கிறது. இது வாயின் முன் பக்கத்தில் முளைக்கிறது. பெற்றோருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி எனினும், பல் முளைக்கும் இடத்தில் குழந்தைக்கு வலி இருப்பதோடு, அந்த இடம் சிவந்தும் காணப்படும். சிறிது காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் இருக்கும். இதைக்கண்டு பெற்றோர் பயப்பட வேண்டியது இல்லை.

பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும் குழந்தைக்கு 2 வயது முடிவதற்குள், மொத்தம் இருக்கும் 20 பால் பற்களும் முளைத்து விடும், 2 வயது ஆனவுடன் மேல் தாடையில் 10 பால் பற்களும், கீழ் தாடையில் 10 பால் பற்களும் இருக்கும்.

நிலைப் பல் : குழந்தைக்கு 6 வயது ஆகும்போது, கருவில் 6-வது வாரத்தில் உருவான முதல் பால் பல், கீழே விழுந்து, நிலைப் பல் முளைக்கத் தொடங்கும். அதன் பிறகு ஒவ்வொரு பால் பற்களாக விழுந்து, நிலைப் பற்கள் முளைத்துக் கொண்டே வரும். 13 வயதில் 28 நிலைப் பற்கள் முளைக்கும். 22 வயதுக்குள் ஞானப் பற்கள் என்று அழைக்கப்படும் விஸ்டம் டீத் உள்பட மொத்தம் 32