பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

181

பற்கள் நிலைப் பற்களாக முளைத்து விடும். பற்களை ஒழுங்காகப் பராமரித்தால், இறக்கும் வரை நிலைப்பற்கள் கீழே விழாது.

பல் பராமரிப்பு : குழந்தைகளுக்கு 6-வது மாதத்தில், முதல் பல் முளைத்த உடனேயே, பஞ்சைத் தண்ணீரில் நனைத்து அதைச் சுத்தம் செய்ய வேண்டும். காலை, இரவு என இருமுறை இதைச்செய்வது நல்லது. உணவு சாப்பிடுவதற்கு, முன்பும் , பின்பும், இது போன்று செய்வது நல்லது.

பால் பற்கள் அனைத்தும் முளைத்தவுடன், பற்பசை வைத்து சிறிய பிரஷ்ஷைக் கொண்டு, குழந்தையின் பல்லை, தாய் துலக்கிவிட வேண்டும். வளர, வளர, பல் துலக்கும் முறையைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நிறையப் பற்கள் முளைத்த உடன், கொஞ்சம் பெரிய பிரஷ்ஷை வாங்கித் தர வேண்டும்.

குழந்தைக்குப் பல்லைத் துலக்கிவிடத் தொடங்கியதிலிருந்தே வாய் கொப்பளிக்கும் பழக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். வாயில் தேங்கியுள்ள உணவுப் பொருள்கள் வெளியேற, இது உதவும். குழந்தைகளின் பற்களைப் பற்பசையால் துலக்கி, வாய் கொப்பளித்துப் பராமரித்தால் மட்டும் போதாது. காவ்ஷியம் சத்துள்ள உணவுகளை இடைவிடாது கொடுக்க வேண்டும். பாலில், கால்ஷியம் சத்து அதிகமாக உள்ளது. எனவே, காலையிலும் மாலையிலும், குழந்தைக்குத் தவறாது பால் கொடுக்க வேண்டும்.

நோய் வாய்ப்பட்டிருக்கும் போது குழந்தை சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தச் சமயத்தில், 6 வயதில் உருவாகும், நிலைப் பற்களுக்குத் தேவையான சத்துக் கிடைக்க, கால்ஷியம் மாத்திரைகள் கொடுக்கலாம்.