பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

183

சொத்தைக்கு காரணம் : பல் பராமரிப்புக் குறைபாடுதான், பல் சொத்தைக்குக் காரணம். இதற்கு கால்ஷியம் காரணம் அல்ல. புளோரைடு பற்பசை பயன்படுத்தாமல், இருப்பதால் தான் பல் சொத்தை ஏற்படுகிறது என்ற கருத்து தவறு.

பற்புற திசு நோய் அல்லது பல் ஆட்டம் காணுதல்: இதுவும், பரவலாகக் காணப்படும் நோய். இது ஆங்கிலத்தில் ‘பயோரியா’ என்று அழைக்கப்படுகிறது. பற்களில் உணவுப் பொருள்கள் தேங்கும்போது பல் படலம் ஏற்படுகிறது. இந்தப் படலத்தையும் சுத்தம் செய்யாமல் இருக்கும்போது, உமிழ் நீரில் உள்ள கால்ஷியம் அப்படலத்தின் மீது படிந்து, காரையை உண்டாக்குகிறது. பற்களின் கழுத்துப் பாகத்தில், மஞ்சள் நிறமாகவும், பச்சை நிறமாகவும், காரை படிகிறது. இந் நிலையிலும் கூட வலி இருக்காது.

அப்போதும் கவனிக்காவிட்டால், ஈறுகளைக் காரை உறுத்தி, ஈறுகள் வீங்கும். பற்களுடன் ஒட்டியிருக்க வேண்டிய ஈறுகளில் வீக்கம் தெரியும். அடுத்த கட்டமாக, ஈறுகளில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கும். நோய் தீவிரமாகும் நிலையில் எலும்புகளுக்குப் பரவி எலும்புகளும் திசுக்களும் சிதைந்து, பல் பலம் இழந்து, அசையத் தொடங்குகிறது. மேலும் மேலும் எலும்பு சிதையும்போது பல் ஆடிக் கீழே விழுகிறது. இப்படி ஒரு நிலைப்பல் விழுந்தால், அந்தப் பல் மீண்டும் முளைக்காது.

பயோரியாவுக்குச் சிகிச்சை: படல நிலையில் உள்ள பற்களை நன்றாகத் தேய்த்து, படலங்களை மருந்துகள் மூலம் அகற்றினால், பிரச்சனை தீர்ந்து விடும். காரை படிந்துவிட்டால், கருவிகள் கொண்டு அகற்றி, சுத்தம்