பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முதுகு வலி வருவது ஏன்?

உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் நோய், முதுகு வலி. அது ஒரு நாட்டின் உற்பத்தித் திறனையே பாதிக்கும். இதற்கு மூல காரணம், தகுந்த உடற்பயிற்சி இல்லாதது தான்.

இளம் வயதினர், தகுந்த உடற்பயிற்சி இல்லாமல் திடீரென ஒரு பாரத்தைக் தூக்க முயன்றால், அவர்களுக்கு முகுகு வலி ஏற்பட்டு, தசை விலகலாம். இதை மூச்சுப் பிடிப்பு என்று மக்கள் கூறுவது வழக்கம். இந்தத் தசைப் பிடிப்பு, கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளுக்கு அதிகம் ஏற்படுகிறது.

தசைப் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க : இதற்கு, தினமும் சரியான உடற்பயிற்சி செய்வது மட்டுமன்றி ஒரு பளுவை மேலே தூக்க வேண்டுமானால், அதற்குண்டான முறையில் (Properposition) தனது கால்களையும், முதுகையும், கைகளையும் வைத்துக்கொண்டு தூக்க வேண்டும். இவ்வாறு தூக்கும்போது, தசைப் பிடிப்பு வராது. இத் தகைய தசைப் பிடிப்பு ஏற்பட்டவா்களுக்குத் தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம், தசை விலகல் எந்த இடத்தில்