பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

187

ஏற்பட்டுள்ளது என்று அறிந்து காெள்ளலாம். எம்ஆர்ஐ ஸ்கேனில், (Disc Proplapse) (இரண்டு முதுகெலும்புக்கும் நடுவில் உள்ளதசை (disc) கடினமான வேலை செய்யும்போது, விலகி, பின்புறம் உள் நரம்பை அழுத்துவதால் வலி உண்டாகும்.) ஏற்பட்டுள்ளதைத் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து, நரம்பை அழுத்திக் கொண்டிருக்கும் ஜவ்வை அகற்றினால்தான் வலி குறையும்.

முதுகெலும்புகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி, விடுவதால் முதுகு வலி வரலாம். இந்த முதுகெலும்பு விலகுவதால் வரும் வலி, பெரும்பாலும் பிறவியிலிருந்தே உள்ளது. இதனால் பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், எலும்பு விலகாமல் இருக்க, அறுவை சிகிச்சை மூலம், பிளேட் ஸ்குரு பொருத்த வேண்டும்.

முதுகு எலும்பு தேய்வதால்... : 50-60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி, பெரும்பாலும் முதுகெலும்பு தேய்வதால் ஏற்படும் விளைவே ஆகும். இவ்வாறு முதுகெலும்பு தேய்வதால், உண்டாகும் முதுகுவலிக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படாது. அவர்களுக்குத் தகுந்த உடற்பயிற்சி அளித்து, உடல் பருமனாக இருந்தால், எடையைக் குறைத்து, நிவாரணம் பெறலாம். கிட்டத்தட்ட, ஒரு மாதம் உடற்பயிற்சி செய்தும், மருந்து சாப்பிட்டும், முதுகு வலி குணமடையாவிட்டால், மேற்கொண்டு எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

மிகக் குறைந்த சதவீதம் உள்ள முதுகு வலி, தண்டு வடத்துக்கு உள்ளிருக்கும் கட்டியின் (Tumour) காரணமாகவும் இருக்கலாம். அப்படியிருந்தால் எம்ஆர்ஐ ஸ்கேன் துணையடன் கண்டறிந்து, அறுவை சிகிச்சை மூலம் சரியப்படுத்த முடியும்.