பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

191

பிறவியிலேயே முதுகெலும்வு வளைவாக இருப்பதால், குழந்தைகளில் தோற்றம் மாறுபட்டு, 15—20 வயது ஆகும்போது, அவர்களது தோற்றம் பொலிவிழந்து போகிறது. இத்தகைய முதுகெலும் வளைவு (Scolosis) இளமையிலேயே கவனிக்கப்படாமல், பல பெண் குழந்தைகள் திருமண வயதின்போது, மருத்துவரை அணுகுகிறார்கள். இந்த நோயைக் குழந்தையாக இருக்கும் போதே கவனித்தால், உடற்பயிற்சி மூலமாகவும், தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை மூலமாகவும் சரி செய்யலாம்.

எதிர் விளைவுகளைத் தடுக்கும் நவீன சிகிச்சை: அன்றாட வாழ்க்கை மிகவும் துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்நாளில், எலும்பு முறிவின் காரணமாக, யாரும் கட்டுப் போட்டுக்கொண்டு, 2-3 மாதம் வீட்டில் இருக்க இயலாது. அதனால், எலும்பு முறிவுக்கு அறிவை சிகிச்சை மூலம் பிளேட் மற்றும் ஸ்குரூ பொருத்தி, கிட்டத்தட்ட 2-3 வாரத்தில், அவரை வேலைக்கு அனுப்பி விடலாம். தற்போது Image internisfier TV Screen மூலம் எலும்பு முறிவு இடத்தை, அறுவை சிகிச்சை செய்யாமலே, ஸ்டெய்ன் லேஸ் ஸ்டீல் ராடு உள்ளே பொருத்தப்பட்டு, அறுவை சிகிச்சையால் வரக்கூடிய எதிர் விளைவுகள் தடுக்கப்படுகின்றன.

எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு, அதற்காகக் கட்டுப் போட்டுக் கொண்டால், சதைகள் பலவீனமாகாமல் இருக்கத் தக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தசைகள் பலவீனமாகி எலும்பு கூடுவதற்கு நாளாகும். கால்சியம், வைட்டமின், புரதம் கொண்ட சத்துணவு, எலும்பு விரைவில் கூடுவதற்கு உதவுகிறது.

குழந்தைகளுக்கு மாவுக் கட்டே போதும் : பொதுவாக, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உண்டாகும் எலும்பு முறிவை, அறுவை சிகிச்சை இல்லாமல், மாவுக்கட்டு