பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

197

சிகிச்சை மூலம் 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் குணப்படுத்திவிட முடியும். நம்நாட்டில் தொற்று வகைத் தொழுநோய் இல்லை. தோலில் உணர்ச்சி குறைந்திருந்தால், அது தொழுநோயின் அறிகுறி.

வெள்ளைத் தழும்புகள் : அழகு குறைவதைத் தவிர, வெள்ளைத் தழும்புகள் உடலில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இது தொற்று நோய் அல்ல.

உண்ணும் உணவு, மருந்துகள்,உடலில் பூசும் அழகு சாதனப் பொருட்கள், பூச்சி கடித்தல், சில விஷச் செடிகள் உடல் மீது படுதல் போன்ற, உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவற்றால் (ஒவ்வாமை) ஏற்படும் பாதிப்பு, உடலின் பல பகுதிகளில் தெரிந்தாலும், முக்கியமாக பாதிப்புத் தோலில் தெரியும். டாக்டரைக் கலந்தாலோசித்தே, இதற்கு மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.