பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

19

தடுப்பதே நல்லது. பிறந்தவுடன் குழந்தையின் கண்களை போரிக் அமிலம் கரைத்த தண்ணீரால் பஞ்சினால் கழுவி, வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலை ஊற்றினால் இந்நோய் ஏற்படாது தடுத்துவிடலாம். நோய் வந்துவிட்டால், கண் மருத்துவர் உதவியை நாடுவது நலம். இந் நோய்க்கு இக்காலத்தில் சல்பானிலமைடு, பெனிசிலின் டெமைசின் போன்ற மருந்துகள் பயன்படுகின்றன.

காமாலை : பிறந்த மூன்று அல்லது நான்கு நாளுக்கு மேல் குழந்தையின் உடல் மீது இலேசான மஞ்சள் நிறம் காணப்படுவதுண்டு. இதற்குக் காரணம், குழந்தையின் உடலில் தேவைக்கு மீறிய அளவில் சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கின்றன. வேண்டப்படாதவைகளை, இயற்கை போக்கிவிடும் பொழுது, அவைகளினின்று வெளிப்படும் மஞ்சள் நிறப்பொருள், உடலின் மீது இலேசான ஒரு மஞ்சள் நிறத்தை உண்டுபண்ணி விடுகின்றது. ஆனால் சில வேளைகளில், தோல் மட்டும்மின்றிக், கண்ணின் உட்புறமும் சிறு நீரும் மஞ்சள் நிறமாகக் காணப்படும்; மலம் களி மண்ணைப் போல் வெண்ணிறத்தில் காணப்படும். இத்துடன் காய்ச்சலும் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும். அப்போது இதைக் காமாலை நோய் என்பர். சிறு நீரும், மலமும், இதனால் பாதிக்கப்படுவதில்லை. இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. எவ்வித சிகிச்சையுமின்றி நாலைந்து தினங்களில் மஞ்சள் நிறம் மறைந்துவிடும். இவ்வாறு பிறந்த குழந்தைக்கு வரும் மஞ்சள் காமாலைக்குக் காரணங்கள் பின் வருபவை : சீரணக் கோளாறினால் பித்த நீர்க் கோளங்களின் உட்புறமுள்ள மெல்லிய தோலில் வீக்கம் ஏற்பட்டுப் பித்த நீர்த் தேக்கம் எற்படுவது ஒரு விதத்தில் நோய்க்குக் காரணம் பித்த நீர்க் குழாய் பிறவியிலேயே கோளாறாக இருந்தாலும், காமாலை நோய் ஏற்படக் காரணமாகின்றது. கொப்பூழ்க் கொடியில்