பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

199

கர்ப்பத்துக்கும் இதயத்துக்கும் தொடர்பு என்ன? : கர்ப்ப காலத்தில், உடல் பல மாறுதல்களை அடையும் தேவைகளுக்கு ஏற்ப இதயம், ரத்த நாளங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளிலும், மாறுதல்கள் ஏற்படுகின்றன. இது சாதாரணமாக, எந்தக் கோளாறும் இல்லாத பெண்ணுக்கும் பொருந்தும்.

கர்ப்ப காலங்களில் இதயம் தொடர்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன? : கர்ப்ப காலத்தில், இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. இரத்த அணுக்களின் அளவு மற்றும் இரத்த அளவு ஆகியவற்றில், மாறுதல்கள் ஏற்படுகின்றன.

சாதாரணமாகவே இது என்றால், ஏற்கெனவே, இதயக் கோளாறு இருந்தால், என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும். சில பெண்களுக்கு இதய வால்வுக் கோளாறு ஏற்கெனவே இருந்திருக்கும். வளரும் பருவத்தில், பெரிய பாதிப்பு ஏதும் தெரிந்திருக்காது, அல்லது நோய் அறிகுறிகள் ஏதும் தோன்றியிருக்காது. ஆனால், கர்ப்ப காலத்தில், கருவுக்கும் சேர்த்து, இதயம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருப்பதால், நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

அறிகுறிகள் என்ன? : இதய வால்வுக் கோளாறு இருந்தால், மூச்சு இரைப்பு அதிகமாக இருக்கும். கை, கால்களில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சோர்வு அதிகமாக இருக்கும். கர்ப்ப காலத்தில், இதுபோன்ற அறிகுறிகள் தோன்ற வாய்ப்புள்ளதால் எல்லாப் பெண்களுக்குமே, இதயத்தை ஒரு முறை பரிசோதித்து விடுவது நல்லது.

ஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்து விடும் : இவ்வாறு இதயத்தைப் பரிசோதிக்கப் பெரிய கருவிகள்,