பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

பாப்பா முதல் பாட்டி வரை

சோதனைகள தேவையில்லை, இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்துக் கேட்டாலே, கோளாறைக் கண்டு பிடித்து விட முடியும். இதயத்தில் ‘Murmur’ (இயல்பான இதயத் துடிப்புடன் கேட்கும் விநோதமான ஓசை) கேட்டால், கோளாறு இருப்பதாக அர்த்தம். உடனடியாக இதயச் சிறப்பு மருத்துவரிடம் கர்ப்பிணியை அனுப்புவதே நல்லது. இவ்வாறு, உரிய நேரத்தில் சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம், தாய்-சேய் நலத்தைப் பாதுகாக்க முடியும்.

ருமாட்டிக் காய்ச்சலால் ஏற்படும் இதயக் கோளாறு: வளரும் பரவத்தில் பாக்டீரியாக் கிருமி காரணமாக, வறட்டு இருமல் ஏற்பட்டு, பின்னர் அது மூட்டு வலியாக மாறி, இதய வால்வுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இவ்வாறு வறட்டு இருமலில் தொடங்கி, காய்ச்சலுடன் கூடிய மூட்டு வலிக்கு, ருமாட்டிக் காய்ச்சல் என்று பெயர். உலகம் முழுவதும் ருமாட்டிக் காய்ச்சலால் (rhematic fever) ஏற்படும் வால்வுக் கோளாறுகள் தாம் (Valvular problems) கர்ப்பமுற்ற பெண்களின் இதய நோய்க்கான முதன்மை பிரச்சினைகளாகின்றன.

அறுவை சிகிச்சை அவசியமா? : வால்வுக் கோளாறுகள் உள்ள பெண்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி, முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிகிச்சை செய்து கொண்டால், கர்ப்பிணிக்கும், பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. மிகத் தீவிரமான வால்வு பாதிப்புள்ள பெண்கள் தவிர மற்றவர்களின் கர்ப்ப காலமும், பிரசவ காலமும், மருத்துவக் கட்டுப்பாட்டுக்கும், ஆரோக்கியத்துக்கும் உட்பட்டே இருக்கும். மேலும், வால்வு பாதிப்பு தீவிரமாக இல்லாவிட்டால், அறுவை சிகிச்சை தேவையில்லை. மருத்து சிகிச்சையே போதுமானது.