பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

201

பிறவிக் கோளாறு : பிறவி இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கோளாறைச் சரி செய்ய, தற்போது நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் இத்தகையவர்கள் குழந்தைப்பேறு அடைவதில் சிக்கல் ஏதும் இல்லை. இதே போன்று, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களும், கூட திருமணம் முடித்து, மகப்பேறு அடையும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.

பெண்களும் மாரடைப்பும் : பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவு என்ற கணிப்பு, இத்தனை நாள் இருந்து வந்தது. இந்த நிலை இப்போது மாறி வருகிறது. ஏன்? எப்படி?

முன்னர் இருந்த வாழ்க்கை முறையில், இயந்திர வேகமும், பதற்றத்தைத் தரும் கவலைகளும், பெண்களுக்கு ஏற்படுவது குறைவாக இருந்தது. கூடவே, பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன், மாரடைப்பு ஏற்படுவதையும், இரத்த நாளங்கள் அடைபடுவதையும், நாளங்களில் கொலஸ்டிரால் படிவதையும், தடை செய்கிறது. ஈஸ்ட்ரோஜனின் இந்தச் செயலுக்கு ‘கார்டியோ புரொடக்ட்டிவ் எஃபெக்ட்’.” (Cardio protective effect), அல்லது இதயப் பாதுகாவல் திறன் என்று பெயர்.

மாதவிடாய் நிற்கும் வரை : ஈஸ்ட்ரோஜன் காரணமாக, பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சதவிகிதம் குறைவாக இகுத்தது. இருப்பினும், மாதவிடாய் நின்ற பிறகு (மெனோபாஸ்), ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறையும் நிலையில், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகிரிக்கிறது. இந் நிலையில் ஆண்களுக்குச் சமமான விகிதத்தில், பெண்களும் மாரடைப்பால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.