பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

பாப்பா முதல் பாட்டி வரை

முன்பு மாதவிடாய் நின்ற பிறகே, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புத் தேன்றியது. தற்போதைய பரபரப்பு மிகுந்த வாழ்க்கைக் சூழல், உடல் பருமன், கொழுப்பு நிறைந்த உணவுப் பண்டங்கள் காரணாக, மாதவிடாய் நிற்பதற்கு முன்பேகூட மாரடைப்புக்கு ஆளாகத் தொடங்கியுள்ளனர்.

மாரடைப்பின் தீவிரம் ஆண்களைவிட அதிகம் : இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டால், நோயின் தீவிரம் ஆணைக் காட்டிலும் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பெண்ணின் கரோனர் தமனிகள் (Coronary arteries), சிறியதாகவும் விட்டத்தில் குறைவாகவும் உள்ளன. எனவே மாரடைப்பு எற்பட்டு விட்டால், நோய் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

தடுப்பு என்ன? : பரபரப்பு இல்லாத வாழ்க்கை முறை, 40 வயது முதலே கொழுப்புச் சத்து நிறைந்த நெய் உள்பட, உணவுப் பண்டங்களைக் குறைத்துச் சாப்பிடுதல், தினமும் உடற்பயிற்சி செய்து, உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரித்தல் ஆகியவை மூலம், இதய நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.