பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

25

சிகிச்சை : நோயுற்ற குழந்தைகளின் வாயைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுப் போன்ற மருந்து நீரில் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெனிசிலின், சல்பானிலமைடு போன்றவைகளைப் புண் மீது தடவிச் சிகிச்சை செய்வதுடன் சல்பானிலமைடு உள்ளுக்கும் கொடுப்பது நலம். பெனிசிலின் ஊசியின் மூலம் இதைக் குணப்படுத்துவது எளிது.

நாவில் வெடிப்புக்கள் : நாவின் மீது குறுக்கும் நெடுக்குமாகப் பிளவுகள் அல்லது வெடிப்புக்கள் காணப்படுவதுண்டு. டைபாய்டு, மேக நோய், செங்காய்ச்சல் (scare fever) போன்ற நோய்களின் பொழுது நாக்கில் சிறு சிறு பிளவுகள் காணப்படும்.

சிகிச்சை : பொதுவாக, எந்த விதமான நோயின் பொழுதும், வாயைச் சுத்தமாக வைத்திருந்தால், வாயில் புண்ணோ, வெடிப்போ ஏற்படாது தடுக்கலாம். வெடிப்புக்கள் மீது கிளிசரின் போராக்ஸ் என்னும் திரவத்தைத் தடவினால், சிறிது குணம் காணப்படும். மேக நோயினால் ஏற்படும் வெடிப்புக்கள், மேக நோய்க்குச் சிகிக்சை செய்தால் தான் மறையும்.

நோயின் போது நாவின் தோற்றம் : உணவில் எஞ்சிய கழிவுப் பொருள்களுடன், தேகத்தைப் பாதிக்கும் நச்சுக் கிருமிகள் கலந்து கொண்டு, நாவின் மீது வெண்மையாக மாவு படிந்து பரவியதைப் போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்குகின்றன. அசீரணத்தின் பொழுதும், குடல் மந்தமாக உள்ளபொழுதும் நா வெண்மையான மாவு பூசியது போல், சற்று ஈரமாகவும் காணப்படும். வாந்தி, தொற்று நோய்கள், இவைகளால் குழந்தை அவதிப்படும் பொழுது, உமிழ்நீர் வற்றிப் போவதினால் நா உலர்ந்து காய்ந்து, வெண்ணிற மாவு பூசியதொரு தோற்றத்தில் காணப்படும். செங்காய்ச்சல் நோயின் போது, நாவின்