பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

31

பேதியினால், குழந்தையின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்படுகின்றது. உடலில் உள்ள நீர் அதிகமாக வெளியேறி விடுவதனால், உடலுக்குத் தேவையான தண்ணீர் குறைந்துவிடுகின்றது. நச்சுக்கிருமிகளால் உண்டாகும் நஞ்சு எல்லா உறுப்புக்களையும் பாதிப்பதினால், அவை சோர்ந்துவிடுகின்றன. ஆகவே தோல் தளர்ந்து காணப்படும். நாடி மிகவும் மெலிவாகத் தென்படும். கண்கள் குழி விழுந்து, கண்ணிமைகள் விழியை முழுவதும் மூடச் சக்தியற்றுப் பாதி திறந்த நிலையில் இருக்கும். உடலின் வெப்ப நிலை குறைந்து காணப்படும். உதடுகள் கறுத்துவிடுவது பேதி மிகவும் கடுமையாகிவிட்டதன் குறியாகும்.

சிகிக்சை : கம்பளியால் உடலை நன்றாகப் போர்த்தி, உடல்வெப்பம் குறையாது காக்கவேண்டும். மிகவும் கடுமையான பேதிக்கு மருத்துவ சாலையில் வைத்துச் சிகிச்சை செய்வது தான் தகுந்த முறை. உடலிலிருந்து பிரிந்த நீரைச் சரிக்கட்ட, பிளாஸ்மா, 5% குளுக்கோசுத் திரவம், ஏற்கெனவே சோகையினால் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருந்தால், இரத்தம் முதலியவற்றைச் சொட்டு சொட்டாக ஊசிமூலம் ஏற்ற வேண்டியிருக்கும். உணவு சிறிதளவு ஏற்கும் நிலையில் இருந்தால் பால் போன்ற உணவுகளை நிறுத்திவிட்டுப் பார்லி நீர், குளுக்கோசு நீர் இவைகளை மட்டுமே கொஞ்ச அளவில் அரை மணிக்கொரு தடவை கொடுக்க வேண்டும். குடல் வேகமாக இயங்குவதை நிறுத்த, கேயோலின், பிஸ்மத்து முதலியவை உள்ளுக்குக் கொடுக்கவேண்டும். பேதி அதிகமாகி வலிப்பு ஏற்பட இருந்தால், கால்சியம் குளுக்கோனேட்டு மருந்தை ஊசி மூலம் ஏற்றவேண்டி வரும். இதைத் தவிர, வைட்டமின் சி, பி அகியவற்றை வேண்டிய அளவு ஊசி மூலம் ஏற்றவேண்டும். நச்சுக் கிருமிகளைக் கொல்லவல்ல சல்பானிலமைடு மருந்துகளையும் கொடுக்க வேண்டும்.