பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பாப்பா முதல் பாட்டி வரை

உணவுப் பொருள்களை நன்றாக மென்று சாப்பிடாது விழுங்குதல். 5. அவசரமாகச் சுடச்சுட உணவைச் சாப்பிடுவது. 6. அதிகக் கொழுப்புச் சத்து மிகுந்த மிட்டாய்கள்.

நோய்க் குறிகள் : பசியின்மை, காலை வேளைகளில் தலைச்சுற்றல், குமட்டல், குடலில் காற்று நிறைந்து துன்புறுத்தல், சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, அடிக்கடி மூர்ச்சை, அடுப்புக்கரி, மண் போன்றவைகள் தின்னும் கெட்ட பழக்கம்.

சிகிச்சை : சீரணத்தை மந்தப்படுத்தும் பொருள்களை, உணவினின்றும் நீக்கிவிட வேண்டும். அடிக்கடி அசீரணம் ஏற்பட்டால், ஒரு முறை பேதிக்குக் கொடுப்பது மிகவும் நல்லது.

ஈரல் அசீரணம் : மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது.

காரணம் : 1. பரம்பரையாகச் சில குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்லீரல் மந்தமாக வேலை செய்யும் தன்மை காரணமாகலாம். 2. பால், வெண்ணெய் போன்ற பொருள்களை அதிகமாக உணவில் சேர்ப்பதால், கல்லீரல் அதிகமாக வேலை செய்து சோர்ந்து போகலாம்.

நோய்க்குறி : பசியின்மை, குழந்தையின் உடல் எடை குறைந்து கொண்டு வருவது, தூக்கமின்மை, விளையாட்டில் சோர்வு, கண் எரிச்சல், அழுகை, பிடிவாதம் முதலியன. இவற்றுடன் குழந்தையின் மூச்சில் துர்நாற்றம் வீசுவதையும், மலம் மஞ்சள் நிறமாக இல்லாது வெள்ளையாக இருப்பதையும் காணலாம். மற்றும், சில சமயம் தலைவலி, வாந்தி, காய்ச்சல் முதலியனவும் காணப்படலாம்.

சிகிச்சை : சீரணத்தைப் பாதிக்கும் உணவு வகைகளை நீக்கி, எளிதில் சீரணிக்கும் உணவு வகைகளைச் சேர்க்க