பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

37

வேண்டும். ஒழுங்கான நேரத்தில் சாப்பிடும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். மேலும் கிரெ பொடி (Grey powder) 12 கிரெயின் அல்லது ரூபார்ப் (Rhubarb) 1/2 கிரெயின் என்ற அளவில் படுக்கும்போது, ஒருவார காலம் கொடுக்கலாம்.

குடல் அசீரணம்: ஐந்திலிருந்து எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அதிகம் காணப்படும்.

காரணம் : 1. இரைப்பை, குடல் இவைகளில் அதிகப்படியாகக் கோழை உண்டாகி, சீரண நீர் கலந்து அதனுடைய உரத்தைக் குலைத்து விடுதல். 2. குடலில் கசியும் கோழை, அங்கே தங்கியுள்ள மலத்தின் மீது படிந்து விடுவதினால், குடல் மலத்தை வெளியே தள்ள முடியாமலாகி மலச்சிக்கல் ஏற்படுதல். மலச்சிக்கலால் ஏற்படும் நஞ்சு இரத்ததில் கலந்து அசீரணம் உண்டு பண்ணுகிறது. 3. உணவில் அதிக சர்க்கரையும் புரோட்டீனும் இருத்தல், அதிக வேலை, தொண்டையில் சதை வளர்ந்து புண்ணாகுதல்.

சிகிச்சை : குழந்தையின் உணவில் ஒழுங்குமுறை வேண்டும். குழந்தைக்குத் தகுந்த ஓய்வும், வேறு பொழுது போக்குகளும் வேண்டும். சீரணத்தைக் கெடுக்கும் சாக்லேட்டுப் போன்ற கொழுப்புக் பண்டங்கள் போன்றவற்றை நீக்க வேண்டும். ஒருமுறை பேதிக்குக் கொடுப்பது நலம். பசியைத் தூண்டும் கசப்பு மருந்துகள் (Bitters) சிலவற்றைக் கொடுப்பது நலம். இரவு வேளைகளில், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய், மலை வாழைப்பழம், அல்லது ஒர் அவுன்ஸ் பாரபின் எண்ணெய் போன்றவைகளைக் கொடுத்து, மலச்சிக்கலின்றிக் காப்பது நலம்.

சளிப்பு : மூக்கின் உட்புறமுள்ள மெல்லிய தோலைப் பாதித்து, அதைத் தொடர்ந்துள்ள துளைகளையும்