பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

41

இருமல் : இது ஒரு தனிநோய் அல்ல ; உடலைப் பாதிக்கும் நோய்களின் அறிகுறி. இதில் இரண்டு வகைகள் உள்ளன. தனியே வரும் இருமல். 2. காய்ச்சலுடன் காணப்படும் இருமல். இருமல் குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் நோய்களில் ஒன்று.

இருமலுக்கு காரணம் : 1. நுரையீரல்களுக்குச் செல்லும் சிறு குழல்களில் இரணம் எற்பட்டு, அதினின்று கசியும் சளி, குழலுக்குள்ளே தங்கி மூச்சு முட்டலை உண்டு பண்ணுகையில், உடல் அதை நிவர்த்திக்கச் சளியை அப்புறப்படுத்தச் செய்யும் முயற்சி இருமல். இந்த நோய் காய்ச்சலுடன் வரலாம்; தனியாகவும் வரலாம். 2. தொண்டையிலும், மூக்கிலும், சதை வளர்ச்சி ஏற்பட்டிருத்தல். 3. உள்நாக்கு நீண்டு வளர்ந்து இருப்பது. 4. பருவகால வேற்றுமையினால் தொண்டையில் இரணம் ஏற்படுவது.

நோய்க் குறிகள் : தொண்டைச் சதை, அடினாய்டு இவைகளின் வீக்கத்தினால் இருமல் ஏற்பட்டால், குழந்தை மூச்சுத் திணறக், கண்களில் நீர் பெருகி இருமும். இரவில்தான் இருமல் அதிகம் காணப்படும். இருமல் நின்றதும், சாப்பிட்ட உணவு வாந்தி எடுக்கும். தொண்டையில் இரணம் ஏற்பட்டதால் காணும் இருமல், சளியற்ற வறட்சியான இருமலாக இருக்கும். தொண்டையில் ஈரம் உலர்ந்தவுடன் அடிக்கடி ஏற்படும்.

உள்நாக்கு நீண்டதால் ஏற்படும் இருமல் ; குழந்தை படுத்துக்கொள்ளும் பொழுது, உள்நாக்கு வாயின் பின் பாகத்தின் மீது படிவதால், உறுத்தி இருமல் ஏற்படுகின்றது. இது சளியற்ற, வறட்சி இருமலாக இருக்கும். இரவு வேளைகளில் தான் அதிகம் காணப்படும்.

மூச்சுக் குழலற்சியால் ஏற்படும் இருமல்; சில சமயம் இருமலுடன் காய்ச்சலும் சேர்ந்து காணப்படும்.