பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

43

பா. வரை அதிகரித்துக் காணப்படுவதுண்டு. உடலின் எவ்விதமான நோயின் அறிகுறியும் இன்றி, இந்த விதமாக, இலேசாக உடலின் வெப்பம் அதிகரிப்பதுண்டு. குடலில் பூச்சி, கல்லீரல் மந்தமாக இயங்குதல், தொண்டையில் சிறிது இரணம், இவைகள் தினசரி வெப்ப நிலையைச் சற்று உயர்த்திக் காட்டக்கூடும்.

குழந்தைகளுக்குக் காய்ச்சல் உண்டுபண்ணும் நோய்கள்:

1. சளிப்பு. 2. தொண்டை அடைப்பான். 3. இன்புளுயன்சா. 4. மூளை உறை அழற்சி (Menngitis) 5. தட்டம்மை (Measles). 6. செங்காய்ச்சல் (Scarietiever). 7. மன்னைக் கட்டி (Mumps). 8. வைசூாி (Small pox) 9. கக்குவான் இருமல். (Wooping Cough) 10. மூச்சுக்குழலற்சி (Bronchtis). 11. நிமோனியா, 12. தொண்டைச் சதைப்புண் வீக்கம். 13. டைபாய்டு காய்ச்சல். 14. டைபஸ் காய்ச்சல். 15. சீதபேதி (Dysentry) 16. சிறு நீரகத்தில் நோய். (Nephritis). 17. கல்லீரல் நோய்கள். 18, முடக்குவாதம் (Rheumatism) 19. க்ஷயம். 20. சீழ்க்கட்டிகள், சொறி சிரங்கு. 21. இளம்பிள்ளை வாதம் முதலியன.

பொதுவாக முதல் வயதிலிருந்து ஐந்து வயதுவரை குழந்தைக்குக் சாதாரண சளிப்பு, மூச்சுக் குழலற்சி போன்ற நோய்களால் சில சமயம், காய்ச்சல் 1040 பா. வரை ஏறி விடுவதுண்டு. தொண்டை அடைப்பான், நிமோனியா போன்ற அபாயகரமான நோய்களில் காய்ச்சல் 1010 பா. வுக்கு மேலே காணப்படாமல் இருப்பதுண்டு. ஆகவே காய்ச்சல் அளவைக் கொண்டு நோயின் தன்மையை உணர்வது தகுந்த முறையல்ல. குழந்தைப் பருவத்தில் நரம்பு மண்டலம் உறுதியடையாத நிலையில் இருப்பதினால் உடம்பில் திடீரென்று அதிவெப்ப ஏற்பட்டால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கசிவு ஏற்பட்டுவிடும். ஆகவே அதைத் தடுக்க நோய்களைக் சட்டெனத் தணிக்கும் உபாயங்களைக் கையாள்வது தகுந்த