பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பாப்பா முதல் பாட்டி வரை

முறையாகும். குழந்தையின் தலையில் ஐஸ் பையை வைத்துக் காய்ச்சலைத் தணியச் செய்யவேண்டும். ஒரு வயதுற்கு ஒரு கிரெயின் எடை என்ற அளவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைக்கு, ஐந்து கிரெயின் அளவிற்கு மேற்படாதபடி ஆஸ்பரின் கொடுத்தால், காய்ச்சல் சட்டெனத் தணிந்து விடும். காய்ச்சல் வேறு பல நோய்களின் வெளிப்படையான சின்னமாதலால் அந்த நோய்களுக்குத் தகுந்தபடி சிகிச்சை செய்வது அவசியம்.

மன்னைக்கட்டி (Mumps) : இதைப் பொன்னுக்கு வீங்கி என்றும், புட்டாலம்மை என்றும் அழைப்பார்கள். இது தொற்று நோய்.

நோய்க்குக் காரணம்: ஒரு வித வைரஸ் கிருமிகள், உமிழ் நீர்ச் சுரப்பிகளைப் பாதிப்பதினால் அவைகள் வீங்குகின்றன. அச்சுரப்பிகளில் பரோட்டீடு (Parotid) என்ற கன்னச் சுரப்பி முக்கியமாக பாதிக்கப்படுகின்றது.

நோய்க் குறி: தொற்று ஏற்பட்ட பின், சுமார் 17 அல்லது 21 நாட்களுக்குப் பிறகுதான் இந் நோய் குழந்தையிடம் காணப்பெறும். வாய், கண், மூக்கு வழியே கிருமிகள் உள்ளே பரவிச் செல்கின்றன. குளிர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, இவற்றுடன் நோய் தொடங்கலாம். அல்லது கீழ்த்தாடையின் பின்பக்கம் இலேசாக வலிக்கத் துவங்கிப், பிறகு காய்ச்சல், தலைவலி, வாந்தியுடன் தொடங்கலாம். உமிழ்நீர்ச் சுரப்பியின் வீக்கம் முதலில் ஏதாவது ஒரு பக்கத்தில் தொடங்கும். ருெம்பாலும் இடப்பக்கத்துச் சுரப்பி முதலில் வீங்கத் துவங்குகின்றன. இடது காதின் அடியில் கீழ்த்தாடையின் பின்புறத்தில் சிறிதளவாக ஒரு வீக்கம் தோன்றத் தொடங்கிச், சுமார் மூன்று நாட்களில் பரோட்டீடு சுரப்பியும், சில சமயம் இரண்டு பக்கத்து பீஜங்களும் வீங்கிப் போவதுண்டு. இதைத் தவிர, ஆண் குழந்தைகளுக்கு மார்பு வீக்கமும்,