பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

47

ஏற்படுகின்றன. அழற்சி மிகவும் கடுமையாகிப்போனால் காய்ச்சல் மிகவும் அதிகமாகி, நாடித்துடிப்புக் குறைந்து, மூச்சுத் தாறுமாறாக வெளிப்படத் துவங்கி, நினைவு குலைந்து, முடிவில் மரணம் உண்டாகிறது.

சிகிச்சை : பெரும்பாலும் குழந்தை இந் நோயினின்று குணமடைவது அபூர்வம். மூளையில் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தைக் குறைக்க அடிக்கடி முதுகுத் தண்டில் ஊசியினால் குத்தி நீர் எடுக்க வேண்டும் பொது வாக க்ஷயரோகத்திற்குத் தருகிற ஸ்டிரெப்ட்டோமைசின் போன்ற மருந்துகளைக் கையாளவேண்டும். மற்றக் கிருமிகளால் ஏற்படும் நோய்க்கு, சல்பானிலமைடு வகைகள், பெனிசிலின் போன்ற மருந்துகள் பயன்படுகின்றன. இந்த நோய் வந்த குழந்தைகளை மருத்துவச் சாலையில் வைத்துச் சிகிச்சை செய்வது நலம்.

நடக்க முடியாமை : பத்தாவது மாதத்தில் எழுந்திருந்து, சுவரைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கும் குழந்தை ஒன்றரை வயதிற்குள் நன்றாக நடக்கத் தொடங்கிவிடும். சில குழந்தைகள் வயது மூன்று ஆகியும் நடவா.

காரணம் 1. கணைநோய்: இந்த நோயில் எலும்பு மெலிந்து போவதினால், குழந்தை தாமதமாக நடக்கப் பழகுகிறது. 2. மூளை மந்தம். 3. பாரிச வாயுவினால் கால் பாதிக்கப்பட்டிருத்தல். 4. பிறக்கும் போது, இடுப்புப் பூட்டு நழுவியிருத்தல். 5. பல நாட்கள் நோயாகப் படுத்திருந்த குழந்தைக்கு நடப்பது மறந்துபோய் விடுதலுமுண்டு. 6. க்ஷயம், முடக்கு வாதம் முதலியநோய்கள், முட்டிகளைப் பாதிப்பதுண்டு.

சிகிச்சை : கணை நோய் வந்த குழந்தைகளுக்கு, ஊட்டமான உணவு, கால்சியம், வைட்டமின் டீ முதலியவை அதிகம் அளித்தால் விரைவில் எலும்பு