பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

49

பிறந்த குழந்தை, தாய்ப்பால் சாப்பிடத் துவங்கி, இரண்டு நாட்களில் சருமத்தின் மீது சிவப்பான சிறு புள்ளிகள் போன்ற எழுச்சிகள் காணப்புடும். இதைச் செவ்வாப்பு எனச் சாதாரணமாக அழைப்பார்கள். தாய்ப்பால் ஒத்துக் கொள்ளாது ஏற்படும் அலெர்ஜி நோய்க்குத் தாயின் பாலை நிறுத்திவிட்டு, வேறு செயற்கை உணவு கொடுக்கவேண்டும். அல்லது தாய்ப்பால் ஒத்துக் கொள்ளும்படி, உடல் நிலையை அபிவிருத்தி செய்யத்தக்க முறைகள் (Desentisation) கையாள வேண்டும். தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, புட்டிப்பால் அளிப்பதற்குப் பதில் தமிழ்நாட்டு வழக்கப்படிக் கழுதைப் பால் அளித்துக் குழந்தையின் உடல் நிலையை அபிவிருத்தி செய்யலாம்.

பிறவிக் கிரந்தி (Congeental syphils): கிரந்தி நோய் உள்ள பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தை, அந்நோயுடனேயே பிறக்கின்றது. பார்க்க : கிரந்தி.

நரம்பு நோய்கள் : குழந்தையின் நரம்பு மண்டலம், பெரியவர்களின் நரம்புமண்டலத்தைப் போன்று முற்று பெற்று உறுதியடையாது. வளர்ச்சி நிலையில் இருப்பதால் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகின்றது. இதனால் பல்வேறு நரம்புக் கோளாறுகள் குழந்தைகளிடம் காணப்படுவதுண்டு.

காரணம் : 1. பிறவி சில குழந்தைகள் பிறவியிலேயே மிகவும் பயந்த இயல்புடையவர்களாக இருப்பார்கள். சத்தம், அதட்டல் முதலியவை கேட்டதும் நடுநடுங்கிப் போவதுண்டு. 2. கணைநோய், முடக்கு வாதம் போன்ற நோய்கள்.

முகத்தசை அசைவு : இது தனிப்பட்ட ஒரு நோய் அல்ல. குழந்தையின் நரம்பு மண்டலம் மிகவும் மெலிந்த நிலையில் இருப்பதை, வெளிப்படையாகக் காட்டும் ஓர்