பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

51

நிதானப்படுத்த, புரோமைடுகள், குளோரால் முதலிய மருந்துகள் உள்ளுக்குச் சாப்பிடக் கொடுப்பது நலம். கணைநோய் மூலகாரணமாக இருந்தால், அதற்குத் தகுந்தை சிகிச்சைகள் செய்வது தான் முறையாகும். மீன் எண்ணெய், ஆரஞ்சுப் பழச்சாறு, முட்டை, இரும்புச் சத்துள்ள டானிக்குகள், இவைகளைக் கொடுத்துப், பொதுவாக உடல் நிலையை நலமுற வைத்திருந்தால், அடிக்கடி இசிவு வராது காப்பாற்றலாம்.

பிறவிக் குறள்வளை நடுக்கம் (congenital Laryngeal stridor) : இதுவும் நரம்புபற்றிய ஒரு கோளாறு. பேச்சுக் குழல்களில் உள்ள தசை மாறுபட்டு இயங்குவதால், குழந்தை காற்றை உள்ளுக்கு இழுத்துச் சுவாசிக்கையில், குரல் நாண்கள் (Vocal chords) சட்டென விரிந்து கொடுத்துக் காற்றை உட்புறம் அனுப்பாமல் சிறிது தாமதிக்கின்றன.

நோய்க்குறி: பிறந்த சில வாரங்களில், குழந்தை மூச்சு விடுகையில் பூனை சீறுகின்றதைப் போன்ற ஒரு ஒலி எழும். ஆனால், தூங்குகையில் இத்தகைய ஒலி காணப்படாது. குழந்தை கோபப்படும் பொழுதும், எரிச்சலாக இருக்கையிலும், இந்த ஒலி மிகவும் அதிகமாகக் கேட்கும்.

சிகிச்சை : இது மந்த இசிவைப்போல், கொடியதல்ல. இது குழந்தையின் முதல் வயதில் தானே மறைந்துபோகும். ஆகவே தனிப்பட்ட சிகிச்சை தேவையில்லை.

கை கால் இசிவு (Tetany) : இது, கைகளிலும் கால்களிலும் உள்ள சில தசைகள் திடீரென்று இழுத்துக் கொள்வதினால், ஏற்படும் இசிவு நோய்.

காரணம் : இந் நோய்க்கு மூலகாரணமாக உள்ளது, கணைநோயும், அதிக பேதியும் ஆகும். ஒரு வயதிற்கு