பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

53

தலைமோதல் : மேலே கூறப்பட்ட தலையாட்டம் போல், குழந்தை திடீரென்று அடிக்கடி தலையைக் கட்டில், சுவர், பெட்டி போன்ற கடினப் பொருள்கள் மீது தானே சென்று மோதிக் கொள்வதும், நரம்புக் கோளாறுகளில் ஒரு வகையாகும். சில சமயம் கொஞ்சம் அழுத்தமாக மோதிக்கொள்வதினால் சிறு காயம் ஏதேனும் ஏற்படுவதும் உண்டு.

காரணம் : முளைக்கும் பல் வேதனை செய்வதினாலும், காதில் வலி இருந்தாலும், குழந்தையின் நரம்புகள் வேதனை கொள்வதால், அதைத் தவிர்க்க, அவ்வாறு மோதிக்கொள்கிறது. தனிப்பட்ட சிகிச்சை தேவையில்லை. புரோமைடு மருந்துகள் சிறிதளவு அவ்வப்போது அளித்தால் குணமாகிவிடும்.

இரவில் பயக்கோளாறு (Nightterrors) : இரவில் தூங்கும் குழந்தை, சடக்கென்று விழித்துக்கொண்டு, வீறிட்டு அலறி நடுங்குவதும், ஒருவகை நரம்புக் கோளாறாகும். அடிக்கடி இப்படி நேர்ந்ததால் குழந்தையின் நரம்பு மண்டலம் மிகவும் மெலிந்து போகக்கூடும். அதனால் தூக்கம் கெடும். உடல் நலம் அழிந்துபோகும். பயக் கோளாறுகளுக்குக் குழந்தை இலக்காவதற்கு உண்மையான காரணம், உடல்நலம் பழுதுபட்டிருப்பது தான். மலச்சிக்கல், தொண்டைச்சதை அடினாய்டு முதலியவை வீங்கி வளர்ந்து விடுதல், இவைகள் காரணமாகின்றன.

சிகிச்சை : தொண்டையில் ஏற்பட்டிருக்கும் தொண்டைச் சதை வளர்ச்சிக்குத், தகுந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதும் உத்தமம். மலச்சிக்கலுக்கு ஒருமுறை பேதிக்குக் கொடுப்பது நலம். இரவில் இருளாக இருக்கும் அறையில், தனியே குழந்தையைத் தூங்கவிடக் கூடாது. அறைக்குள்