பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

59

இந்தியாவில், சென்ற இருபது ஆண்டுகளாக இந்த மூன்று வகைப் பள்ளிகளுடன் காந்தியடிகள் அமைத்த பூர்வாதாரப் பள்ளிகள் (த. க.) என்ற வகைக் குழந்தைப் பள்ளிகளும் தோன்றிவருகின்றன.

எ.ச.

கிண்டர் கார்ட்டன் முறை : குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கக் கிண்டர் கார்டன் முறையை ஏற்படுத்தியவர் பிரிட்ரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் புரோபெல் (த. க.) என்னும் ஜெர்மானியத் தத்துவ ஞானியும் கல்விச் சீர்த்திருத்தவாயுமாவார். இவர் வகுத்த பாடமுறைகள், குழந்தைகளின் விளையாட்டுக்களையே ஆதாரமாகக் கொண்டிருந்தன. விளையாட்டின் மூலம் கற்பிப்பதையே இவர் மிகச் சிறந்த முறையெனக் கூறினார்.

புரோபெல், 1839-இல் தம்முடைய புதிய கல்வி நிலையங்களுக்குக் கிண்டர் கார்ட்டன் என்னும் பெயரை வழங்கினார். இதற்குக் ‘குழந்தைத் தோட்டம்’ என்பது பொருள். இவர் தம்முடைய பள்ளியை, ஒரு தோட்டமாகவும், பிள்ளைகளைத் தோட்டத்திலுள்ள செடிகளாகவும் கருதினார். தாவரங்கள் வளர்வதற்கு எவ்வாறு சூரிய வெப்பம், நல்ல காற்று முதலியவை அவசியமோ, அவ்வாறே குழந்தைகளின் உடல், உணர்ச்சி, உள்ளம், முதலியவை வளம் பெறப் பரந்த இடம், நல்ல காற்று, சூரிய வெளிச்சம் முதலியன இன்றியமையாதவை என்று அவர் மனிதனுக்குரிய கல்வி (Education of Man) என்னும் தம்முடைய நூலில் எடுத்துரைக்கிறார்.

எல்லாவிதக் கல்வியும், குழந்தையின் சுய முயற்சியால் தான் ஏற்படுகிறது என்ற உண்மையையும், குழந்தை தன் உள்ள நிலையைத் தெரிவிக்கும் பன்மையே கல்வியின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்னும் தத்துவத்தையும், கிண்டர் கார்ட்டன் முறை வற்புறுத்துகிறது. குழந்தையானது கல்வியை ஆசிரியரிடமிருந்து