பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

61

தொடர்ச்சியான முன்னேற்றம், தன்முயற்சி, ஆக்கச்செயல், கைத்தொழில் பயிற்சி, தோட்டம், காடு, வயல் முதலியவற்றிலும், பள்ளிக்கூடத் தொழிற் சாலையிலும், வீட்டைச்சுற்றியுள்ள இடத்திலும், வேலை செய்தல் ஆகியவை கிண்டர் கார்ட்டன் பள்ளியின் சிறப்பியல்களாகும்.

புரோபெலுக்குக் கல்வி பற்றிய இப் புரட்சிக் கருத்துக்கள், பெஸ்ட்லாஜி (த. க. ) என்பவருடைய தொடர்பால் தோன்றின. பெஸ்டலாஜியே இக் காலத்துக் கல்விமுறைக் கருத்துக்களின் பிறப்பிடமாவார். மான்டிசோரி அம்மையார் (த. க. ) போன்ற கல்வித்துறை வல்லுநர்கள், நமக்கு புரோபெலின் கல்விக் கருத்துக்களையும், முறையையும் புதுப்பித்து அளித்திருக்கின்றனர்.


குழந்தைப் பாடல்

(Nursery rhymes) : பாட்டை விரும்பாத குழந்தையே இல்லை என்று சொல்லலாம். பச்சைக் குழந்தை தாய் பாடும் தாலாட்டுப் பாடலிலே இன்பம் காண்கிறது. அவள் பாடுவதைக் கேட்டுத் தானும் மழலை மொழியிலே என்னென்னவோ குதப்புகிறது. பேசக்கூடிய ஆற்றல் பெற்ற குழந்தை, ஓசை இன்பம், சந்த இன்பமும் கொண்ட சிறிய பாடல்களைப் பாடி மகிழ்கிறது. அந்தப் பாடல்களுக்குப் பொருள் இருக்கவேண்டும் என்பதில்லை; ஓசை இன்பம் இருந்தால் போதும்.

அக்கக்கா ஊர்க்குருவி
ஆலம் பழம்போடு
தின்னப் பழம் போடு
திருமுடிக்கோர் பூப் போடு

என்று, கிராமத்துக் குழந்தைகள் பாடும். இப்படி எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. அவற்றை