பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தையின் உடம்பில் சிறிது நேரம் இளவெயில் படும்படி செய்தல் நல்லது. சூரியனுடைய புற ஊதாக் கதிர்கள், குழந்தையிடம் கணைநோய் வராமல் பாதுகாக்கும், வந்தாலும் குணப்படுத்தும்.

பிறந்த குழந்தை, பெரும் பகுதிப்பொழுது உறங்கும். உணவு உண்ணுவதற்காக மட்டுமே விழிக்கும். நாள் ஆக ஆக அதிகப்பொழுது விழித்திருக்கும். ஓராண்டு நிறையும் வரை, இரண்டு தடவை பகலில் உறங்கும். அதன் பின் ஒரு தடவையே உறங்கும். குழந்தையை உறங்கப் பண்ணத் தொட்டிலிலிட்டு ஆட்டுவது தேவையில்லை. குறிப்பிட்ட பொழுதில் உறங்கப் பழக்கிவிட்டால் போதும். பொதுவாகச் சிறு குழந்தைகள் பால் உண்ணும்போதே உறங்கிவிடும். அது நல்லதே.

குழந்தைக்கு உடை குறைவாகப் பயன்படுத்வதே நல்லது. குளிர் தாக்காமலிருக்கும்பொருட்டு மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெப்ப நாட்களில், உடையில்லாமல் இருப்பது நலம். குளிர் காலத்திலும், உரோமத்தாலான துணிகள் குழந்தைக்கு நல்லதில்லை. அத் துணி குழந்தையின் மெல்லிய தோலை உறுத்தும். குழந்தையின் துணிகளை வெளுக்கக் காரம் மிகுந்த சோப்புக்களைப் பயன்படுத்தலாகாது.

குழந்தை பிறந்த சில நாட்கள் வரை, பெரும் பகுதியான பொழுது உறங்கும். குளிப்பாட்டவும் பால் கொடுக்கவும் மட்டும் அதை எழுப்ப வேண்டும். நாள்தோறும் மூன்று தடவை தாய்ப்பால் கொடுக்கலாம். இந்த நாட்களில், மலப்போக்கு மருந்து தர வேண்டியதில்லை. இடையிடையே பருக நீர் கொடுத்தால் போதுமானது. இவ்வாறு குழந்தை, தாயின் வயிற்றுக்கு வெளியே சுவாசிக்கப் பழகிய பின்னர், பால் பருகப் பழகும். பசி எழும்போது குழந்தை வீரிட்டு அழும்