பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

83

தன்மை. கையை மூடி விரித்தல், இதயத் துடிப்பு, குழந்தையைச் சுற்றியுள்ள நீரின் அளவு, குழந்தையின் அசைவு, ஆகியவை சரியாக இருந்தால், 10 புள்ளிகள் வழங்கப்படும். அக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. 2 புள்ளிகள் குறைந்தாலும் என்ன குறை என்று பார்த்து உடனே சிகிச்சை செய்யவேண்டும்.

முதல் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால், அடுத்த குழந்தைக்கும் அதுபோன்ற குறைபாடு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, ஸ்கேன் மூலம் அதைக் கண்டுபிடித்து, முன் கூட்டியே சிகிச்சை பெறுவது நல்லது.

அடிக்கடி கருச்சிதைவு : கர்ப்பப் பை பலவீனமாக இருந்தால், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். கர்ப்பப் பையின் உள்வாய் திறந்திருந்தாலும், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். கருவைத் தாங்கும் சக்தி, கர்ப்பப் பைக்கு இருக்காது. இக் குறையை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து, கருத்தரித்த சில வாரங்களில் உள்வாயைத் தைத்து விடுவார்கள். பின்னர் கடைசி மாதத்தில் அத் தையலைப் பிரித்துவிடலாம்.

குவா குவா இல்லாதவர்களுக்கு : குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மிகவும் உதவும். பெண்களின் கர்ப்பப் பையில் கருமுட்டை எப்போது உருவாகிறது, முட்டை எப்போது வெடித்து வெளியேறுகிறது என்பதை எல்லாம் ஸ்கேன் மூலம் அறிந்து, அந்த நேரத்தில் இயற்கை முறையிலோ அல்லது செயற்கை முறையிலோ, கருத்தரிக்கச் செய்யலாம். சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு ஸ்கேன் உதவும்.

மாதவிலக்கு நின்ற பின்னர் : பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பின்னர், கர்ப்பப் பையைச் சோதிப்பது அவசியம்.