பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

87

திறனுக்குப் பாதிப்பு ஏற்படாத தன்மை, ஆகிய காரணங்களால், சிசேரியன் அறுவைப் பேறு அதிகரித்து வருகிறது.

சிசு மரணம் : அக் காலத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை இல்லாத காரணத்தால் தான் மரண விகிதத்தோடு சிசு மரண விகிதமும் (infant Mortality Rate) அதிகமாக இருந்தது. அக் காலத்தில் பல்வேறு காரணங்களால் பிறக்கும்போதே அல்லது பிறந்த உடனேயோ 1000த்துக்கு 140 குழந்தைகள் உயிரிழந்தன. அக் காலத்தில் கர்ப்ப கால மருத்துவ சோதனைகள் இல்லாததால், குறை மாதக் குழந்தைகள், சிறுநீரகங்கள் இல்லாமை, இதயம் பாதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால், குழந்தை பிறந்தவுடன் இறக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது கருவில் இருக்கும் குழந்தையின் உடல்நிலையைச் சோதிக்க அல்ட்ரா சவுண்ட் இருப்பதாலும், சிசேரியன் அறவை சிகிச்சையாலும் சிசு மரண விகிதம் 1000த்துக்கு 40 என்ற நிலைக்குக் குறைந்துள்ளது.

முக்கிய காரணங்கள்: பெண்ணின் உடல் ஆரோக்கியம், பெண்ணின் பிறப்பு உறுப்பின் (கூபகம்) வடி வமைப்பு, கர்ப்பப் பையில் குழந்தை நிலை, கருவில் உள்ள குழந்தையின் நஞ்சு, நஞ்சுக்கொடி உள்ள இடம் ஆகியவையே சிசேரியன் அறுவைசிகிச்சை அதிகரித்தற்கான காரணங்கள்.

30 வயதுக்குமேல் திருமணம் செய்தால் : பெண்ணுக்கு 21 முதல் 25 வயதுக்குள் திருமணம் செய்தால், பேற்றுக்குப் பெண்ணின் உடல்நிலை இயல்பானதாக இருக்கும். 30 வயதைத் தாண்டிய பிறகு, குறிப்பாக, குறிப்பாக 35 அல்லது 40 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்குக் கருப்பைக் கழுத்து வலுவேறி, இயல்பாக எளிதில் திறந்து கொடுப்பதில்லை.