பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

89

திருமணம் செய்துகொள்ளவே தகுதியற்றவள் எனக் கருதப்பட்டாள். ஏனெனில், அப்போது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துற்குரிய இன்சுலின் மருந்து கிடையாது. தாய்க்குச் சர்க்கரை நோய் இருந்தால், கருவில் உள்ள குழந்தையின் எடை (4 கிலோ அளவுக்கு) அதிகமாகி, பேறு கடினமாகிவிடும். தற்போது கர்ப்ப கால சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, நல்ல மருந்துகள் உள்ளன. மேலும் சர்க்கரை நோய் காரணமாக, குழந்தையின் எடை கருவில் அதிகரிக்கும் நிலையில் தாய்க்கும் சேய்க்கும், ஆபத்து ஏற்படாமல் இருக்கவே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் காரணமாகவும் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரித்துள்ளது.

குழந்தையின் நிலை: பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, தாயின் கூபக, வாயிலை நோக்கிக் குழந்தையின் தலை முதலிலும், கால் பின்னரும் இறங்கவேண்டும். சில நேரங்களில் கால் கீழேயும், மேலே தலையும் இருக்கும்; பிரசவ இறுதி தேதிக்கு, மூன்று வாரங்களுக்கு முன்பு இவ்வாறு, கால் முதலில் இருப்பது தெரிந்துவிடும். இவ்வாறு இருந்தால், குழந்தை வெளியே வரும் நிலையில், கழுத்து இறுகி, சிசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையைத் தற்போது, எந்தப் பெற்றோரும் விரும்புவதில்லை. பிரசவ நேரத்தில் குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காக, சிசேரியன் செய்வதையே பெற்றோர் விரும்புகின்றனர். இப்படிப்பட்ட தருணங்களில் சிசேரியன் செய்துவிடுவதே நல்லது.

நஞ்சு இடம் மாறியிருந்தால் : கர்ப்பம் தரித்தது முதலே தாயிடமிருந்து குழந்தைக்கு ரத்தம் மூலம் ஆக்சிஜன், உணவு உள்பட அனைத்தும் செல்லும் ஆதார சுருதியாக