பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

91

தாயின் கூபகத்துக்குப் பொருந்தாமல் இருந்தாலும், சிசேரியன் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

குழந்தை இல்லாத் தம்பதியினருக்கு : உலக அளவில் தம்பதியினரில் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேருக்குக் குழந்தை இல்லாத நிலை உள்ளது. குழந்தைப் பேறு இல்லாத் தன்மையைப் போக்க, தற்போது செயற்கைக் கருத்தரிப்பு உள்பட, நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்து, ஒரு பெண் கருத்தரிக்கும் நிலையிலோ அல்லது தொடர்ந்து கருச் சிதைவு ஏற்பட்டு அவதியுற்ற பெண், கருத்தரித்த 10 மாதம் நெருங்கிவிட்ட நிலையிலோ, எந்தத் தம்பதியினரும் குழந்தைக்குச் சிக்கல் ஏற்படுவதை விரும்புவதில்லை. குழந்தை, பாதுகாப்பாக இப் பூமியை எட்ட வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். எனவே சிசேரியன் அவசியமாகிறது.

இளம்சிசு மரணம்: 1950-ல் 1000த்துக் 60 என்ற நிலையில் இளம் சிசு மரண விகிதம் இருந்தது. தற்போது கடின பிரசவங்களில், சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தைகள் காப்பாற்றப்படுவதால், 1000 த்துக் 30 முதல் 40 வரை என்ற அளவுக்கு சிசு மரண விகிதம் குறைந்துள்ளது.

தாய் மரண விகிதம்: பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில் தாய் இறக்கும்நிலை சிசேரியன் காரணமாக வெகுவாகக் குறைந்துள்ளது. 1950 ல்.1000 த்துக்கு 20 என்ற விகிதத்தில் இருந்த தாய் மரண விகிதம், 1990-ல் 1000 த்துக்கு 3 முதல் 4 வரை எனக் குறைந்தது. தற்போது அந்த விகிதம் 1000 த்துக்கு 1 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.