பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கர்ப்பப் பைக்கு நீங்களே காவல்

ர்ப்ப காலத்தில் குழந்தையைச் சுமத்தல் என்பது ஒரு சுகமான சுமை. குழந்தையின் கர்ப்பக்கிரகமான கர்ப்பப் பையில், உயிருக்கு ஆபத்தான கட்டிகளும் தோன்றுகின்றன என்பது வேதனைக்குரியது.

வயிற்றின் அடிப்பகுதியில் சிறநீர்ப் பைக்கும், மலக்குடலுக்கும் நடுவில், கர்ப்பப் பை உள்ளது. இளவயதில் 4 செ.மீட்டராக இருக்கும் இக் கர்ப்பப்பை, வயதுக்கு வந்த பின்னர், ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜோஸ்டிரான் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாவதால், சுமார் 9 செ.மீட்டர் அளவுக்கு விரிவடைகிறது.

கர்ப்பப் பை வளர்வதற்குக் கரு முட்டையின் வளர்ச்சியும் முக்கியக் காரணம். குழந்தையைச் சுமக்கும் காலத்தில் 30 செ.மீ வரை இது விரிவடைகிறது.

கர்ப்பப் பையின் பாகங்கள் : உடல், வாய், குழாய் என மூன்று பகுதிகளைக் கொண்டது. கர்ப்பப் பை வாயில் நீர் கோர்த்த கட்டிகள் (congeitalcyst) வரும். ஹார்மோன்கள் மாற்றத்தால் ரத்த ஓட்டம் அதிகமாகி கர்ப்பப் பையின் உடல் பகுதியில் வருவது கர்ப்பப் பை தசைக்கட்டி (fibroid). இது எந்த வயதிலும் வரலாம். குடும்பப் பாரம்பரியமாகவும் 30 வயது முதல் 50 வயது வரையிலும் இக்கட்டி வர அதிக வாய்புள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கும், ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கும், அடிக்கடி