பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

பாப்பா முதல் பாட்டி வரை

கருக்கலைப்பு செய்து கொள்பவர்களுக்கும் இக் கட்டி வரக்கூடும். நெல்லிக்காய் அளவில் உருவாகும் இக் கட்டி சுமார் 3 கிலோ வரை வளரும்.

அறிகுறிகள் என்ன? : அடிவயிற்றில் கனமான உணர்வு இருத்தல், மாதவிடாயின்போது வலியுடன் கூடிய அதிக ரத்தப்போக்கு, அதன் காரணமாக ரத்த சோகை ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

கர்ப்பப் பையின் உடல் பகுதியில் வரும் மற்றொரு கட்டியை Adenomyosis என்று சொல்வார்கள். இது பெரிதாக வளராது என்றாலும், வயிற்று வலியும் ரத்தப்போக்கும், கீழ் முதுகு வலியும் இருக்கும். 3 அல்லது 4 குழந்தைகள் உள்ளவர்களுக்கும் 40 வயதுக்கு மேலானவர்களுக்கும் இக்கட்டி வர வாய்ப்புள்ளது.

கர்ப்பக் குழாயில் அதிகமாக நோய்க்கிருமிகள் தாக்கினாலும், சீழ் பிடித்து கட்டிகள் உருவாகலாம். தொடர்ந்து ஆராேக்கியமற்ற முறையில் கருச்சிதைவு செய்பவர்களுக்கு, இக் கட்டி வரலாம். சுமார் 20 முதல் 40 வயது வரை இந்த கட்டிகள் வரக்கூடும்.

புற்றுநோய்க் கட்டிகள் : பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 80 சதவீதம் கர்ப்பப் பையில் தான் ஏற்படுகிறது. இளம் வயதில் திருமணம் செய்தல், அதிகக் குழந்தைகளைப் பெறுதல், அடிக்கடி கருவுறுதல், ஆகியவற்றால் கர்ப்பப்பை வாயின் உட்புறமும், வெளிப்புறமும் புற்றுநோய் ஏற்படுகிறது. கிராமங்களில் இப்பாதிப்பு அதிமாகவுள்ளது.

இதில் அதிவேகமாக வளரும் வகை Anaplastic எனப்படும். மெதுவாக வளரும் வகை squamous cell carcinoma என்றழைக்கப்படுகிறது. இக் கட்டியானது 45 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் வரும். மாதவிடாய்