பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

97

நின்ற பிறகு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெள்ளைபடுதல், விட்டு விட்டு வரும் மாதவிடாய், முதுகுவலி ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.

இப் புற்றுநோயை 0-4 கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரம்பத்தில் (0 - நிலையில்) கண்டுபிடித்தால், எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். சிகிச்சை காலதாமதமானால், அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

வேகமாக வளரும் கர்ப்பப் பை புற்று நோயானது, அருகில் உள்ள உறுப்புகளையும் பாதிக்கும். கர்ப்பப் பையின் உடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகள், மகப்பேறு தொடர்பானவை. இதற்கு chonocarcinoma என்று பெயர். கர்ப்பப் பையில் முத்துப்பிள்ளை உண்டானவர்களுக்கு, இந்தக் கட்டிவர 40 சதவீத வாய்ப்புள்ளது.

இக் கட்டி உள்ளவர்களுக்குக் குழந்தை உண்டாயிருத்தல் போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், குழந்தையின் அசைவு இருக்காது. இதை ஸ்கேன் மூலம் 10 வாரத்துக்குள் கண்டுபிடித்து விடலாம்.

இக் கட்டி ஏற்பட்டவர்களுக்குக் கல்லீரல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இக் கட்டியை மருத்து மூலமாகக் குணமாக்கலாம். தெற்காசிய நாட்டிலுள்ளவர்களுக்கு, இக் கட்டி அதிகமாக வருகிறது. 20 வயது முதல் 35 வயதுக்குள்ளானவர்களுக்கு, இக் கட்டியின் தாக்குதல் ஏற்படுகிறது.

புற்றுநோயாக மாறும் கட்டிகள் : சதைக்கட்டிகள் நாளடைவில் புற்றுநோய்க் கட்டிகளாக (Sarcoma) மாற வாய்புள்ளது. கர்ப்பப் பையின் உட்புறப் பகுதியிலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை இல்லாதவர்கள், அதிக எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இக் கட்டி வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது வரக்கூடும்.