பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

பாப்பா முதல் பாட்டி வரை

கர்ப்பப் பைக் குழாயில் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் 0.3 சதம் மட்டுமே. கர்ப்பப் பையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளால் உயிருக்கு ஆபத்து. சாராரணக் கட்டிகள் பக்க உறுப்புகளைப் பாதித்து, அதனால் சாவு ஏற்படும்.

கண்டுபிடித்தல் : டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையின் போதே, 50 சதவீத நோயைக் கண்டுபிடித்து விடலாம். 40 வயதுக்கு மேலான பெண்கள், Pap smear சோதனை (கர்ப்பப் பை வாய்ச் சோதனை) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், புற்றுநோயின் துவக்கத் கட்டத்தைக் கண்டுபிடித்து விடலாம். அடுத்து, திசு பரிசோதனை (பயாப்சி) செய்தாலும் கர்ப்பப் பையில் ஏற்படும் கட்டிகள் குறித்துக் கண்டுபிடித்து விடலாம்.

ஸ்கேன் பரிசோதனையின் மூலம் கட்டி குறித்து அறியலாம். லேப்ராஸ்கோப்பி மூலமாகக் கட்டியை நேரடியாகப் பார்த்து, அதில் பயாப்சி எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்தலாம். கர்ப்பப் பை உள்ளே வளரும் கட்டியை, ஹிஸ்ட்தோஸிகோபி கருவி மூலம் அறிய முடியும். சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிகிச்சை : பெண்ணின் வயது, குழந்தை நிலை, குழந்தைகள் எண்ணிக்கை, நோயின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம், கட்டி மட்டுமே அகற்றப்படுகிறது. கர்ப்பப் பை அகற்றப்பட மாட்டாது. ஆனால், குழந்தை இருந்தாலும், இல்லா விட்டாலும், புற்றுநோய் இருந்தால், கர்ப்பப்பையும் அதைச் சார்ந்த பகுதியும் அகற்றுவது அவசியம்.