பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒன்றாகக் கருதப்படுகின்றது.இராமனுஜரின் விசிஷடாத் வைதம் அன்பு நெறியிலேயையும இறை உண்மையையும் ஒருங்கினாணந்து ஒறறுமை உணர்வை வழங்குவதாகும். இரு வேறு கருததுகளிடையே இணக்கம் காணும் கருதது முறைகளை பினபற்றுவோராலும திறன் ஆய்வோராலும் பகுத்துணரப் பெறுகின்றன.

  விசிஷ்டாத்வைதம் சமய உலகில் ஸ்ரீ வைஷ்ணவம் எனப்படும, மெய்ப்பொருளியலை நன்கு விளக்குகின்ற ஞானிகள் பலர் விசிஷ்டாதவைததைச் சிறப்போடுகூடிய அத்துவிதம் என்றும், தழுவிய அத்துவிதம் என்றும் குறிக்கின்றனர். --
  
 இவர்கள் விசிஷ்டாத்வைதத்தின்

முக்கியக் கொள்கையாக விளங்கு கின்ற ஒன்றை ஊடாக மறக்கின்றனர். விசிஷ்டாத்து விதத்திற்கு ஜீவன் பொருளாகவும் அடையாளமாகவும் ஒருங்கே விளங்குகிறான். இதனை மறுத்து விசிஷ்டாத் வைதத்தை சிறபபோடு கூடிய அத்துவிதம் என்றோ அடை மொழிகேற்ற அத்துவைதம் என்றோ கூறுவது பொருந்தாது.

  துவைதம், ஜீவனும் பிரமமும் வேறுபட்டிருப்பதை வறுபுறுததுகின்றது. பேதாபேதம் என்பது ஜீவனும் பிரமமும் ஒன்றே என்றும்; ஜீவனும் பிரமமும் வேறு பட்டன என்றும் ஒருங்கே வற்புறுத்துகின்றது.பேதாபேதம் என்பது "அனைத்து இறைக் கொள்கையாகும்" Pantheism விசிஷ்டாத்வைதம், துவைதம், பேதாபேதம் அனைத்து கொள்கையவற்றின் வேறானதாகும். ஏனெ னில் இறைவன் அனைத்துயிர்களிலும் அகத்தே ஆன்மாவாக விளங்குகின்றார் என்றும் அகத்து விளங்கு வதோடு இறைவன் அனைத்து உயிர்களையும் கடந்து விளங்கு கின்றார் என்றும் கூறுகிறது.
  உள்பொருளும அதன் பண்பும் ஒன்றே. பிரமம் எல்லையற்றது. அதே சமயததில் எலலைக்குட்பட்டும்