பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாரதத்தில் செழித்த வைணவம்

99

மாத்வர் கூறுவது. மாத்வரது ஒருமைக் கொள்கையை ஏனைய ஒருமைக் கொள்கைகளினின்று பிரித்து உணர்த்துவது ஆகும்.

மாத்வரது மெய்ப்பொருளியல், ஒவ்வொரு கூறிலும், தனிச்சிறப்போடு விளங்குவது ஆகும். அளவை நெறியின் ஆற்றல், சிந்தனைத் தெளிவு. உண்மை உணர்வு, கருத்துப் பொதுமை, விரிந்த பொதுநோக்கு ஆகியவை மாத்வரது மெய்ப்பொளியலின் சிறப்பியல்புகளாகும்.

மாத்வர், உள்ளத்தியலுக்கும், அளவையியலுக்கும் சிறப்பாகத் தந்த பெருவிளக்கங்களாக அமைவன:அறிவு அல்லது ஞானம், யாக ஆன்மா விளங்கும்பொழுது விளைவது என்பதும், சாஷி உயரிய அறிவு என்பதும், இவை வேதத்துள் விளக்கப்பெற்றன என்பது ஆகும். சமூகப்புணவமைப்பு, அரசியலமைப்பு ஆகியவற்றை அவர் பிரம மெய்ப்பொருளியலை நினைவில் வைத்தே கருதுகிறார். ஆதலால், ச்மூக, அரசியல் மெய்ப்பொருளியல்கள் ஒரு புதிய சிறப்பினை மாத்வரது கருத்திலே பெறுகின்றன.

சார்பற்றது. உள்பொருளைப் படைக்கின்றது. தனி ஆன்மாக்களைத் தோற்றுவிக்கின்றது.உலக நன்மைக்கும், தனது நண்மைக்கும் மனிதன் சிறந்த பங்கினை உதவுதல் விஷ்ணுயாவற்றையும் இயக்குவோன் என்ற உண்மையை உணரும்போதேயாகும் அற ஆன்மீகப் பண்புகள் பிரம மெய்ப்பொருளியலறிவைப் பெறுதற்கு இன்றியமை யாதன. மெய்ப்பொருள் அறிஞர்க்கு வேதமும், பிரமமும் என்றென்றும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன; விடுதலையென்பது மெய்ப்பொருள் அறிஞர், விஷ்ணுவைப் பேரார்வத்தோடு இன்புறுதலாகும். இவையனைத்தும், மெய்ப்பொருளியலுக்கு மாத்வர் தந்தவையாகும்.இவையனைத்தையும், நன்கு பாராட்டுதல், மெய்ப்பொருளியல் வரலாற்றிலே புதிய அதிகாரத்தைத் தொடங்குவதாகும்.