பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 பஞ்சத்தின் முதற்காரணமாகவும் நிமித்த காரணமாகவும் விளங்குகிறது. முதற்காரணம், நிமித்த காரணத்தினின்று வேறுபடுவது இயல்பு, களிமண், குயவனின் வேறானது. ஆனால், பிரமமோ ஒருங்கே முதற்காரணமாகவும் நிமித்த காரணமாகவும் விளங்குகிறது. இப்பிரபஞ்சமாகப் பரிணாமம் அடைவதால் பிரமமே முதற்காரணமாகும். களிமண் ஜாடியாதல் போலப் பிரமமே பிரபஞ்சமாகிறது. பிரமம்தானே இப்பிரபஞ்ச வடிவாக மாற்றிக் கொள்வதால் நிமித்த காரணமும் ஆகிறது. பிரபஞ்சம், பிரமத்தின் உண்மை யான மாற்றம் ஆகும். மற்றைய வைணவ வேதாந்திகளைப் போல், நிம்பார்க்கரும், பரிணாமம் அல்லது காரணம், காரியமாக உண்மையிலேயே மாறுகின்றது என்ற கொள் கையினை வரையறை செய்கிறார். பிரமம் பிரமம், பிரபஞ்சத்தின் முதற் காரணம். ஆதலால், பிரபஞ்சத்துள் அடங்கி உள்ளார்ந்த நிலையில் உள்ளது. மண்ணினால் ஆன ஜாடியிடத்தில் மண் அன்றி வேறு எதுவும் இல்லாததுபோல், பிரமத்தின் காரியமாகிய பிரபஞ்சத்தில் அனைத்தும், பிரமமேயாகக் காணப் பெறுகிறது. இவ்வுலகில் காணப்பெறும், வெவ்வேறு அறிவுடைப் பொருள்களும், அறிவியல் பொருள்களும், யாவும் பிரமத்தினின்று வேறானவைபோலத் தோன்றி னும் பிரமத்தின் மாற்றமேயாகும். பிரமத்தின் மாற்றம் என்கிறபொழுது உண்மையில் பிரமமேயாகும். இக்கார ணத்தால் உப்நிடதங்கள் “அனைத்தும் பிரமமே” என்று கூறுகின்றன. பிரமம் பிரபஞ்சத்தைக் கடந்து விளங்கினும், பிரபஞ்சத்தின் அகத்தும் அமர்ந்துள்ளது. பிரமம் பிர பஞ்சத்திற்கும் புறம்பாக விளங்குவதெனக் கொள்வதற்கு இல்லை. குயவன் மட்பாண்டத்திற்கு அயலானவன். ஆனால் பிரமம், பிரபஞ்சத்திற்கு அயலானது அன்று.