பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 த கோவேந்தன் பிரமம், பிரபஞ்சத்தினோடு முற்றிலும் ஒன்றிய நிலையில் இல்லாவிடினும், அது பிரபஞ்சத்திற்கும் மேலாகவும், பெரியதாகவும் விளங்கினும் பிரபஞ்சம் முழுமையாகவும் நிறைவாகவும் பிரமத்தை வெளிப் படுத்த இயலாதது. எனினும், அது பிரபஞ்சத்தில் நிலை பெற்றுப் பிரபஞ்சத்தை இயக்குவதாகவும், அக ஆன்மா வாகவும் விளங்கிப் பிரபஞ்சத்தை உயிர்க்கச் செய்கிறது. பிரமம், பிரபஞ்சத்தின் காரணம் என்னும் கொள்கை குறித்துப் பல்வேறு, தடைகள் எழுப்பப் பெறலாம். முதற்கேள்வி, பிரமம், பிரபஞ்சத்தைப் படைப்பது ஏன்? பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள மெய்ப் பொருளியல் கருத்து முறைகள் அனைத்தும் பிரபஞ்சப் படைப்பு குறித்து முக்கிய கேள்விக்கு முதலிலே விடை காணுதல் வேண்டும். அறிவுள்ள ஒருவனது செயல்கள் வரையறையான குறிப்பை அல்லது முடிவினை உடையன வாகும். படைப்பு. ஒரு செயலாகும். இப்படைப்பும், பிரமத்திடத்து முக்கிய குறிப்பு ஒன்றைக் கொண்டு விளங்குதல் வேண்டும். பிரமம் அறிவு நிலையில் உயர்வற உயர்ந்து விளங்குகின்றது. ஆதலால், இவ்வுலகினைப் படைத்ததில் ஒரு நோக்கு இருத்தல் வேண்டும். இறைவனுக்கு இப்பிரபஞ்சத்தைப் படைத்தலிலே நோக்கு யாதாக இருத்தல் கூடும்? நம்முடைய செயல்கள், விருப்பங்களின் விளைவுகள் ஆகும். நிறைவேறாத உளநிலைகள், செயல்கட்குக் காரணமாதலை நமது வாழ்விலே காண்கிறோம். பிரமமோ என்றென்றும் நிறைவுடையது. முழுமையு டையது, இன்பமாவது. எனவே, எவ்வகைக்குறைவோ, நிறைவின்மையோ இருத்தற் கில்லை. ஆதலால், பிரபஞ் சத்தின் படைப்பு இறைவனுக் காக அமைதற்கில்லை. இறைவனுக்குத் தேவையானது எதுவும் கிடையாது. ஆன்